பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 2 , இயற்கை
மொழியை ஆள்வோம்
பாடப்பகுதி வினாக்களும் , விடைகளும்.
************** ************* *************
மொழியை ஆள்வோம்
தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக.
The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers' fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.
விடை :
விடியற்காலை
காலை நேரத்தில் பொன்னிறக் கதிரவன் தன் ஒளிமிக்க கதிர்களால் இருளை விரட்டும். பால் வண்ண மேகங்கள் அலைகளைத் தொடங்குகின்றன. வண்ண வண்ணப் பறவைகள் தங்கள் காலை நேரத்தை மெல்லிசையோடு ஆரம்பிக்கின்றன. அழகான வண்ணத்துப்பூச்சிகள் பூக்களைச் சுற்றி நடனமாடும். பூக்களின் மணம் காற்றை நிரப்பும். காற்று மென்மையாய் எங்கும் வீசி அனைத்தையும் இனிமையாக்கும்.
@@@@@@@ @@@@@@ @@@@@@@@
சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.
இன்சொல், எழுகதிர், கீரிபாம்பு, பூங்குழல் வந்தாள், மலை வாழ்வார், முத்துப்பல்
எ.கா. இன்சொல் - பண்புத்தொகை - இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு.
1 ) எழுகதிர் - வினைத்தொகை
மக்கள், உச்சிவேளையில் சூரியனால் எழுந்தகதிரொளியால் சோர்வடைந்தனர்.
2 ) கீரிபாம்பு - உம்மைத்தொகை
செல்வனும் குமரனும் கீரியும் பாம்பும் போல் சண்டை போட்டுக் கொண்டே இருந்தனர்.
3 ) பூங்குழல் வந்தாள் - அன்மொழித்தொகை
என் வீட்டிற்குப் பூப்போன்ற குழலுடைய பெண் வந்தாள்.
வாழ்த்துமடல் எழுதுக.
மாநில அளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்' எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில்
வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
பாரதி தெரு,
பொன்னையாபுரம் .
02 - 07 - 2021
அன்பு நண்பனுக்கு ,
வணக்கம். நலம். நீயும் , உன் பெற்றோரும் , உற்றோரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
மாநில அளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்' என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில்
வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.
மரங்கள் இல்லையேல் மனித இனம் இல்லை. மரங்களால் விளையும் பயன்களை நாம் நன்கு அறிவோம் . சிறு வயதில் இருந்தே நீயும் நானும் மரங்களோடு விளையாடிய அந்த பால்ய நாட்கள் நினைவிற்கு வருகின்றன. இந்தத் தலைப்பில் கட்டுரை எழுதி நீ மாநில அளவில் வெற்றி பெற்றாய் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மரங்களோடான உனது பயணம் தொடரட்டும். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் மரம் நடுகிறாய் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பா.
தொடரட்டும் உன் பசுமைப் பயணம். தொடர்ந்து எழுது. இன்னும் பல வெற்றிகள் உன்னைச் சேரட்டும்.
என்றும் நண்புடன் ,
மு.மகேந்திர பாபு.
உறைமேல் முகவரி :
பா. கவியரசன் ,
தமிழன்னை வீதி ,
எட்டயபுரம் ,
தூத்துக்குடி ( மாவ ) - 628 902.
*************** ************ ***********
பாரதியின் வசனநடை - சீட்டுக்குருவி
சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக்கண்கள்; சின்னத்தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல்
வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்: இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் மற்றொன்று பெண்.
இது போன்று உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைப் பற்றி வசனநடையில் எழுதுக.
கடவுள் ஒருவரே; அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவர்; ஏழைகளின் பசியை நீக்கும் ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோலாகும்; சிறு தெய்வ வழிபாடு கூடாது; அத்தெய்வங்களின் பேரால்
உயிர்பலி செய்யக்கூடாது! புலால் உண்ணக் கூடாது; எவ்வுயிரையும்
தம்முயிர் போல் எண்ணும்
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கணவன் இறந்தால் மனைவி தாலி
வாங்குதல் கூடாது; மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்தல் கூடாது; எதிலும் பொது
நோக்கம் வேண்டும்; ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும்.
************* ************** ************
********************** *********************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments