ஆறாம் வகுப்பு - அறிவியல் - பருவம் - 2 , பயிற்சித்தாள் 9 - அலகு 3 - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் / 6 SCIENCE - WORKSHEET 9 - QUESTION & ANSWER

 

ஆறாம் வகுப்பு - அறிவியல் 

பருவம் - 2

பயிற்சித்தாள் - 9

அலகு - 2  , நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்




*************   ************   ***************


1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வளிமண்டலத்திற்கு வெளிப்படுத்தப்படும் போது இரும்புப் பொருள்களில் பழுப்புநிறப் பொருளின் படிவு உருவாவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இத்தகைய மாற்றம் ---------------   மாற்றமாகும்.

அ. மெதுவான, மீள்

ஆ. வேகமான, மீளா

இ. மெதுவான, மீளா

ஈ. வேகமான, மீளா

விடை : இ ) மெதுவான ,மீளா


2.கரும்பு அறுவடை செய்யப்படுகிறது.. சர்க்கரை ஆலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சர்க்கரையாக மாற்றப்படுகிறது (1). பின்னர் அது காபியில் சேர்க்கப்படுகிறது (2), இந்த செயல்முறைகள் (1,2,) முறையே எத்தகைய மாற்றங்கள் என்பதை அடையாளம் காணவும்.

அ. மீளாமாற்றம், இயற்பியல் மாற்றம்

ஆ. மீள்மாற்றம், இயற்பியல் மாற்றம்

இ) வேதியியல்மாற்றம், மீளாமாற்றம்

ஈ ) வேதியியல்மாற்றம். மீள்மாற்றம்

விடை : இ) வேதியியல்மாற்றம், மீளாமாற்றம்

3. கீழ்க்காணும் பட்டியலிலிருந்து மீள்மாற்றத்தைத்தெரிவு செய்.

அ. மாம்பழம் பழுத்தல்

ஆ. மரங்கள் வளர்தல்

இ. பூ மலர்தல்

ஈ. கம்பிச்சுருள் நீளுதல் 

விடை : ஈ )  கம்பிச்சுருள் நீளுதல் 

4. மெழுகுவர்த்தி எரியும் போது ஏற்படும் மாற்றங்களில், எது மீள் மாற்றம்?

அ) மெழுகு உருகுதல் 

ஆ. மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்

இ. மெழுகானது திரியின் வழியாக ஆவியாதல்

ஈ. வெப்பம் வெளியாதல்

விடை  : அ ) மெழுகு உருகுதல் 

5. அறிவியல் ஆசிரியர் கதவைத்திறந்தார். அறைக்குள் நுழைந்தார். பாடநூலைத் திறந்தார். கரும்பலகையில் எழுதினார். இவற்றில் மீளாமாற்றத்தை அடையாளம் காணவும்.

அ. கதவைத்திறத்தல்

ஆ. பாடநூலைத் திறத்தல்

இ) கரும்பலகையில் எழுதுதல் 

ஈ. அறைக்குள் நுழைதல்

விடை : இ ) கரும்பலகையில் எழுதுதல் 

6. பின் வருவனவற்றுள் எந்த மீளாமாற்றமானது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை?

அ. காடுகளை அழித்தல்

ஆ. பட்டாசு வெடித்தல்

இ) காய்கனியாதல் 

ஈ. மரம் எரிதல்

விடை : இ ) காய் கனியாதல்

7. அருணா தனது துணிகளுக்கிடையே ஒரு நாப்தலீன் உருண்டையையும், மற்றொரு நாப்தலீன் உருண்டையை ஒரு மூடிய பெட்டியினுள்ளும் வைத்தாள். ஒரு மாதம் கழிந்த பின்னர், துணிகளுக்கிடையே வைத்திருந்த நாப்தலீன் உருண்டையின்
அளவு குறைந்திருந்தது. இந்தச் சோதனையானது பின்வரும் எந்த செயல்
முறையினை உற்று நோக்குவதற்காக நிகழ்த்தப்பட்டது?

அ. மெதுவான மற்றும் மீள் மாற்றம்
ஆ. வேகமான மற்றும் மீள் மாற்றம்
இ. மெதுவான மற்றும் மீளா மாற்றம்
ஈ. வேகமான மற்றும் மீளா மாற்றம்

விடை : இ) மெதுவான மற்றும் மீளா மாற்றம்

8. சாந்தி சர்க்கரை மற்றும் நீரைப் பயன்படுத்தி சர்க்கரைக் கரைசலைத் தயாரித்தார். சர்க்கரைசேர்த்து காப்பி தயாரித்தார். சாம்பார் மற்றும் மோர் ஆகியவற்றுடன் உப்பினைச் சேர்த்தார். இந்த நான்கு விதமானகரைதல் நிகழ்வுகளில் மீள் மாற்றம்
எது?

(அ) சர்க்கரைக் கரைசல் தயாரித்தல்
ஆ. காப்பி தயாரித்தல்
இ. சாம்பாருடன் உப்பு சேர்த்தல்
ஈ. மோருடன் உப்புசேர்த்தல்

விடை : அ ) சர்க்கரைக் கரைசல் தயாரித்தல்

9. நீர் ஒரு பொதுக்கரைப்பான் என அழைக்கப்படுகிறது. ஏனெனில்,

அ. நீர் மிகுதியாகக் கிடைக்கிறது.
ஆ நீர் பெரும்பாலான பொருள்களைக் கரைக்கிறது.
இ. நீர் குடிக்கும் பயன்பாடுகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.
ஈ. நீர் ஒரு புதுப்பிக்கத்தக்க மூலமாக இருக்கிறது.

விடை : ஆ ) நீர் பெரும்பாலான பொருள்களைக் கரைக்கிறது.

10. பூச்சிகளை கவர்ந்து, மகரந்த சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக பூக்கள் மலர்கிறது.
இது ஒரு   -------------    ஆகும்.

1 .மீளாமாற்றம்
2. மெதுவானமாற்றம்
3 . வேகமான மாற்றம்
4 . மீள் மாற்றம்


அ)  1 & 3
ஆ)  2 & 4
இ ) 1 & 2
ஈ ) 3 & 4

விடை : இ ) 1 & 2

11. கோடிட்ட இடத்தை நிரப்புக.:

11. இராணி எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, நீர் ஆகியவற்றைக் கலந்து எலுமிச்சம் பழச்சாறுதயாரிக்கிறாள். இந்தக் கரைசலில் பயன் படுத்தப்படுகின்ற கரைப்பான் நீர் ஆகும்.

12. நீ எதிர்பாராதவிதமாக ஒரு கண்ணாடி டம்ளரை நழுவ விடுகிறாய். அது உடைந்து விடுகிறது. இந்த நிகழ்வானது ஒரு வேகமான மாற்றம் ஆகும்.  ( மெதுவான / வேகமான)

13. இராணி தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புகிறாள். அவளால் பெட்ரோலின் ஆவியை காணமுடிகிறது. இது ஒரு மீளா  மாற்றம் ஆகும். (மீளா/மீள் மாற்றம்)

Ill. சரியா தவறா என எழுதுக:

14. மேகம் உருவாதல் என்பது ஒரு மீள் மாற்றமாகும். (சரி)

15. மீள் மாற்றம் எப்போதும் ஒரு நிரந்தர மாற்றமாகும். தவறு

16. நிலக்கரி உருவாதல் என்பது ஒரு வேகமான மாற்றமாகும். தவறு

17. குளிர்சாதனப் பெட்டியைவிட்டு வெளியே எடுத்தபின் பனிக்கூழ்மமானது உருகுகிறது. இந்த மாற்றமானது ஒரு மீளா மாற்றமாகும். தவறு.

**************   *************     *************


விடை தயாரிப்பு :

திருமதி.கு.சுமதி , அறிவியல் ஆசிரியை , 

ஊ.ஒ.ந.நி.பள்ளி , அவ்வையார்

 பாளையம் ,  கோபி , ஈரோடு.

*************   ************    *************


வாழ்த்துகள் நண்பர்களே ! 
பார்த்ததற்கும் , பகிர்ந்ததற்கும் நன்றி !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

உங்கள் வாட்சாப் குழுவில் 97861 41410 என்ற எண்ணை இணைத்து அனைவரும் பயன்பெறச்செய்யலாம் ஆசிரிய நண்பர்களே !

**********************    *********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  *************    ********

Post a Comment

0 Comments