பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 2 , இயற்கை
இரண்டு மதிப்பெண் - குறுவினா
கூடுதல் வினா & விடை - பகுதி - 1
************* ************** *************
1 ) உயிரினங்களின் முதன்மைத் தேவைகள் யாவை?
மூச்சுக்குக் காற்று, தாகத்திற்கு நீர், உறைவதற்கு நிலம், ஒளிக்குக் கதிரவன் போன்றவை உயிரினங்களின் முதன்மைத் தேவைகள் ஆகும்.
2 ) காற்றின் தன்மை யாது?
(i) காற்றைக் கண்களால் காண முடியாது.
(ii) மெய்யினால் உணரமுடியும்.
(iii) காற்று உயிர்களின் உயிர் மூச்சாகும்.
(iv) காற்றினால் மழை வரும்; பருவ மாற்றங்கள் ஏற்படும்.
3 ) உயிராகத் திகழும் காற்றைப் பற்றி திருமூலர் கருத்து யாது?
திருமூலர் திருமந்திரத்தில் மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார்.
4. பிற்கால ஔவையார் காற்றை எவ்வாறு சிறப்பித்துள்ளார்?
பிற்கால ஔவையார் தம் குறளில் வாயுதாரணை என்னும் அதிகாரத்தில் “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்று காற்றைச் சிறப்பித்துள்ளார்
5 ) திசைகளின் அடிப்படையில் காற்றின் வேறு பெயர்கள் யாவை?
(i) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்
(ii) மேற்கிலிருந்து வீசுவது கோடை
(iii) வடக்கிலிருந்து வீசுவது வாடை
(iv) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்
6 ) காற்றின் வேறு பெயர்கள் யாவை?
காற்றின் வேறு பெயர்கள் :
(i) காற்று
(ii) வளி
(iii) தென்றல்
(iv) புயல்
v ) சூறாவளி
7 ) காற்றையும் கரிகால் பெருவளத்தானையும் தொடர்புப்படுத்தி வெண்ணிக் குயத்தியார் கூறியது யாது?
பழங்காலத்தில் காற்றின் உதவியால் பாய்மரக் கப்பல்கள் மூலம் கடல் கடந்து பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
“நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களிஇயல் யானைக் கரிகால் வளவ” (புறம்)
எனக் கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து சங்ககாலப் பெண் புலவர் வெண்ணிக் குயத்தியார் வளி எனக் குறிப்பிட்டுச் சிறப்புத் செய்திருக்கிறார்.
8 ) காற்றின் ஆற்றல் குறித்து ஐயூர் முடவனார் மற்றும் மதுரை இளநாகனார் குறிப்பிடுவது யாது?
காற்றை மிஞ்சிய வலிமை இல்லை என்பதை ஐயூர் முடவனார்.
“வளி மிகின் வலி இல்லை"
என்று புறநானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை இளநாகனார், கடுங்காற்று மணலைக் கொண்டு சேர்க்கிறது என்று காற்றின் வேகத்தைப் பற்றிக்
குறிப்பிட்டுள்ளார்.
9 ) புவியின் உயிர்ச் சங்கிலித் தொடர் அறுபடாதிருக்க காற்று எவ்வாறு உதவுகிறது?
(i) காற்று உயிர்வளி தந்து உயிர்களைக் காக்கின்றது.
(ii) தாவரங்களை எடுத்துச் சென்று பல இடங்களிலும் தூவுகின்றது.
(ii) பூவின், தேனின், கனியின், தாவரத்தின், உயிரினத்தின் மணத்தைச் சுமந்து புவியின் உயிர்ச்சங்கிலித்தொடர் அறுபடாதிருக்க காற்று உதவுகிறது.
10 ) மின்னாற்றல் குறிப்பு வரைக.
(i) “காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக் கொள்'' என்ற புதுமொழிக் கற்றார் போல் காற்றைப் பயன்படுத்தி மின்னாற்றல் உருவாக்கப்படுகிறது.
(ii) இதனால் நிலக்கரியின் தேவை குறைந்து கனிம வளங்கள் பாதுகாக்கப்படுகிறது.
(ii) உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடமும் இந்தியாவில் தமிழகம் முதலிடமும்
வகிக்கிறது.
11. காற்றை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா எவ்விடத்தில் உள்ளது?
உலகிலேயே அதிகளவு காற்றை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
12. சிறுவர் நிதியம் (UNICEF) காற்று மாசுபாடு பற்றிக் கூறியது யாது?
காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
தெரிவிக்கிறது.
************** ************* **************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ***********
0 Comments