ஆறாம் வகுப்பு - அறிவியல்
பருவம் : 2
பயிற்சித்தாள் - 10
அலகு - 4 - காற்று
*************** ************** ************
1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பின்வருவனவற்றில் எந்த வாக்கியம் காற்றோடு தொடர்பு இல்லாதது?
அ. இது ஒளி ஊடுருவும் தன்மை உடையது
ஆ. இது இடத்தை அடைத்துக் கொள்ளும் தன்மை உடையது
இ. இது ஒரு சேர்மம்
ஈ. இது ஒரு கலவை
விடை : அ ) இது ஒளி ஊடுருவும் தன்மை உடையது
2. பின்வருவனவற்றில் எந்த வாக்கியம் பூமியின் வளிமண்டலத்தின் அடர்த்தி குறித்து சரியானது?
அ. உயரம் அதிகரிக்க இதன் அடர்த்தி அதிகரிக்கிறது.
(ஆ) உயரம் அதிகரிக்க இதன் அடர்த்தி குறைகிறது.
இ. எவ்வித மாற்றமுமில்லை
ஈ ) இடம் சார்ந்தது அல்ல
விடை : ஆ ) உயரம் அதிகரிக்க இதன் அடர்த்தி குறைகிறது.
3. அதிக புற ஊதா கதிர்வீச்சினை உறிஞ்சும் தன்மையுள்ள ஓசோனானது வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் உள்ளது?
அ. இடைவளி மண்டலம்
ஆ. அடுக்குவளி மண்டலம்
இ. அயனி மண்டலம்
ஈ. அடிவளி மண்டலம்
விடை : ஆ ) அடுக்குவளி மண்டலம்
4. காற்றின் கூறுகளை அதன் இயைபின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
அ. ஆக்ஸிஜன் > நைட்ரஜன் > கார்பன்டைஆக்சைடு
ஆ. நைட்ரஜன் > ஆக்ஸிஜன் > கார்பன்டை ஆக்சைடு -
இ. கார்பன்டைஆக்சைடு > நைட்ரஜன் > ஆக்ஸிஜன்
ஈ. நைட்ரஜன் = ஆக்ஸிஜன் < கார்பன்டைஆக்சைடு.
விடை : ஆ ) நைட்ரஜன் > ஆக்ஸிஜன் > கார்பன்டை ஆக்சைடு
5. கீழேயுள்ள படத்தினை உற்றுநோக்கி காற்றில் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனின் விகிதத்தைக் கண்டறியவும்.
78% நைட்ரஜன்
21% ஆக்சிஜன்
1% கார்பன்-டை- ஆக்சைடு,ஆர்கான், நீராவி மற்றும் பிற வாயுக்கள்
அ ) 21
ஆ) 4:1
இ ) 1:4
ஈ ) 1:2
விடை : ஆ ) 4:1
6. ராஜேஷ் உருளைக்கிழங்கு சீவல் (chips) போன்ற உணவுப்பொருட்களை பொட்டலமிட (pack) விரும்புகிறார். உணவுப்பொருட்கள் கெடாமல் பராமரிக்க எந்த வாயு பயன்படுத்தப்படுகிறது?
அ. ஹைட்ரஜன்
ஆ ஆக்சிஜன்
இ) நைட்ரஜன்
ஈ. நியான்
விடை : இ ) நைட்ரஜன்
7. தாவரங்களின் ----------- நைட்ரஜன் அவசியமாகிறது.
அ. இனப்பெருக்கத்திற்கு
ஆ ஒளிச்சேர்க்கைக்கு
இ. நீராவிப்போக்கிற்கு
ஈ.) வளர்ச்சிக்கு
விடை : ஈ ) வளர்ச்சிக்கு
8. சுமதி மேசை மீது ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் பனிக்கூழ்மத்தை (Ice cream) வைத்திருந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு, கண்ணாடிக் கிண்ணத்தின் வெளிப்புறத்தில் நீர்த்துளிகளை கண்டாள். இதே போன்ற நிகழ்வு --------- இன் போதும் நடைபெறுகிறது.
அ) மேகம் உருவாதல்
ஆ மழை பொழிதல்
இ. நீர் ஆவியாதல்
ஈ. பனிக்கட்டி உருவாதல்
விடை : அ ) மேகம் உருவாதல்
9. புதிய கண்ணாடி பலகைகள் தெளிவாகவும், ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட பக்கங்களை உடையனவாகவும் உள்ளன. மூடிய பெட்டியில் வைத்திருந்தால், அவை அப்படியே இருக்கின்றன. அவைகாற்றுப்படும்படி வைக்கப்பட்டால், அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு தெளிவில்லாமல், மங்கலாகத் தெரிகின்றன.காரணம் என்ன?
அ. காற்றிலுள்ள நீராவித்துளிகளானவை கண்ணாடியின் மேற்பரப்பில் உள்ள சிறிய தூசித்துகள்களில் படிகின்றன.
ஆ கண்ணாடியின் புறப்பரப்பில் வேதிவினைகள் நடைபெறுகின்றன.
இ. இது ஒளி ஊடுருவக்கூடிய பொருள்களின் பண்பாகும்.
ஈ. சூரியவெளிக்கு வெளிப்படுத்தப்படுவதால்
விடை : அ ) காற்றிலுள்ள நீராவித்துளிகளானவை கண்ணாடியின் மேற்பரப்பில் உள்ள சிறிய தூசித்துகள்களில் படிகின்றன
10. மனிதர்கள் சுவாசத்தின் போது உள்ளிழுக்கும் காற்று மற்றும் வெளிவிடும் காற்று தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் எது/ எவை சரியானது/சரியானவை?
அ. இரண்டிலுமே நைட்ரஜனின் இயைபு ஒரே மாதிரியாக உள்ளது.
ஆ. வெளியிடும் காற்றில் உள்ளிழுக்கப்படும் காற்றில் உள்ளதை விட கார்பன் டை ஆக்சைடின் சதவீத இயைபு அதிகமாகும்.
இ. வெளியிடப்படும் காற்றில் ஆக்சிஜனின் அளவு குறைவு
ஈ.) இவை அனைத்துமே சரி
விடை : ஈ ) இவை அனைத்துமே சரி
11 ) ------------ ஆனது கடல்மீன்களைப் பதப்படுத்துவதில் பயன்படுகிறது.
அ. குளோரோ புளோரோ கார்பன்
ஆ) உலர் பனிக்கட்டி
இ. கார்பன்டைஆக்சைடு வாயு
ஈ. மந்த வாயு
விடை : ஆ ) உலர் பனிக்கட்டி
12. ராம்உயரமானமலைச்சிகரத்தை ஏறவிரும்புகிறான்.இந்நிகழ்வின்போது, அவனுடன் ஏன் ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்ல வேண்டும்?
அ. வளி மண்டலத்தில் மேலே செல்லச் செல்ல காற்று கிடைக்கக்கூடியதன்மை அதிகரிக்கிறது.
ஆ. வளி மண்டலத்தில் மேலே செல்லச் செல்ல காற்று கிடைக்கக்கூடிய தன்மை குறைகிறது.
இ. வளி மண்டலத்தில் மேலே செல்லச்செல்ல காற்று கிடைக்கக் கூடிய தன்மையில் எவ்வித மாற்றமுமில்லை.
ஈ. மேற்கண்ட எதுவுமில்லை.
விடை : ஆ ) வளி மண்டலத்தில் மேலே செல்லச் செல்ல காற்று கிடைக்கக்கூடிய தன்மை குறைகிறது.
13. கோவிட்19 நோயினால் பாதிக்கப்பட்ட ஒருநபர்/ நோயாளி சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அத்தகைய சந்தர்ப்பத்தில், அவரை மீட்க எந்த வாயுசிலிண்டர் மிக அவசியம்?
அ. ஆக்ஸிஜன்
ஆ கார்பன்டைஆக்சைடு
இ. நைட்ரஜன்
ஈ. சல்பர்டை ஆக்சைடு
விடை : அ ) ஆக்சிஜன்
14. காற்றாலைகளின் பயன் -----------
அ. நீர் நிலைகளிலிருந்து நீர் இறைக்க
ஆ மாவு அரைக்க
இ.) மின்சாரம் உற்பத்தி செய்ய
ஈ. இவைஅனைத்திற்கும்
விடை : இ ) மின்சாரம் உற்பத்தி செய்ய
II.பொருத்துக.
விடைகள்
15.
அ. நீர் வாழ் விலங்குகள் - நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன்
ஆ. மலை ஏறுபவர்கள் - ஆக்சிஜன் வாயு நிறைந்த உருளை
இ. தொழிற்சாலைகள் - புகைக்கரி மற்றும் தூசு
ஈ . காற்று - பாய்மரப்படகு
III சுருக்கமாக விடையளி
16 வளிமண்டலத்தின் எந்த அடுக்கு புவியில் நாம் அனுபவிக்கும் வானிலைக்கு காரணமாக உள்ளது? ஏன்?
அடிவளி மண்டலமானது காற்று இயக்கம் நடைபெறக் காரணம். இவ்வடுக்கில் உள்ள நீராவிதான் மேகங்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது. பூமியல் நாம் அனுபவிக்கும் வானிலைக்கு இந்த அடுக்கே காரணம்.
17 ஆழ்கடல் நீந்துபவர்கள் ஆக்சிஜன் வாயு உருளையைக் கொண்டு செல்லக் காரணம் யாது?
ஆழ்கடலில் ஆக்சிஜன் தனித்துக் காணப்படுவதில்லை. நீரில் கரைந்து காணப்படுகிறது. நீரில் கரைந்துள்ள ஆக்சிகனை சுவாசிக்க மனிதர்களால் முடியாது. எனவே, ஆழ் கடலில் நீந்துபவர்கள் ஆக்சிஜன் உருளையை எடுத்துச் செல்கின்றனர்.
விடை தயாரிப்பு :
திருமதி.கு.சுமதி , அறிவியல் ஆசிரியை ,
ஊ.ஒ.ந.நி.பள்ளி , அவ்வையார்
பாளையம் , கோபி , ஈரோடு.
************* ************ *************
********************** *********************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments