வகுப்பு - 12 , தமிழ்
இயல் 2 - இனிக்கும் இலக்கணம்
நால்வகைப் பொருத்தங்கள் - பகுதி - 1
திணை , பால் , எண் , இடம்
*************** ************* ***********
வணக்கம் நண்பர்களே ! நாம் 12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 ல் உள்ள அனைத்துப் பகுதிகளையும் விரிவான காட்சிப் பதிவு விளக்கத்திலும் , எழுத்திலும் கண்டோம்.
இன்று இயல் 2 ல் நால்வகைப் பொருத்தங்கள் பகுதியில் உள்ள திணை , பால் , எண் , இடம் இவற்றைப் பற்றிய அறமுகத்தினைக் காண்போம்.
பாடப்பகுதிக்குள் செல்லும் முன் நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தைக் காண்போம் .
நண்பர்களே ! பாடப்பகுதி மிக எளிமையாகப் புரிந்ததல்லவா ? இப்போது இலக்கணச் செய்திகளைக் காண்போம்.
ஒரு மொழியின் எழுத்துகளிலோ சொல்லமைப்பிலோ தொடரமைப்பிலோ சொற்பொருள் அமைப்பிலோ காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படும். தற்காலத் தமிழிலும் இவ்வகையான மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம்மாற்றங்களை எல்லாம் தழுவிக்கொள்கிற வகையில் காலத்திற்கேற்ற இலக்கணம் நமக்குத் தேவை. மொழி வளர்ச்சியும் இலக்கணத்தின் தேவையும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமான தொடர்புடையவை.
திணை, பால், எண், இடம்:
திணை, பால், எண், இடம் ஆகியவை மொழியின் அடிப்படைப் பண்புகள்; இவை சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவும். தமிழ்மொழியில் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்துகின்றன. எழுவாய் உள்ள தொடர்களில் அதன் வினைமுற்று எழுவாயுடன் திணை, பால், எண், இடம் ஆகிய நால்வகைப் பொருத்தங்கள் உடையதாய் அமைகிறது. பெரும்பாலான தொடர்களில் எழுவாயை வைத்துக்கொண்டே வினைமுற்றின் திணை, பால், எண் ஆகியவற்றைச் சொல்லிவிடலாம்.
முருகன் நூலகம் சென்றான்.
இத்தொடரில், முருகன் என்னும் எழுவாய் அதன் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்திவிடுகிறது. மேலும் இந்த எழுவாய் தான் பெற வேண்டிய வினைமுற்றை உயர்திணை, ஆண்பால், ஒருமை, படர்க்கை எனப் பொருத்தமுடன் அமையுமாறு வேண்டிநிற்கிறது. இதன் மூலம் எழுவாய்க்கும் பயனிலைக்கும் நெருங்கிய இயைபு இருத்தலை அறியலாம்.
*************** ************* *************
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments