12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - மொழி - நம்மை அளப்போம் . பாடப்பகுதி பலவுள் தெரிக & குறுவினா - வினா & விடைகள்.

 

12 ஆம் வகுப்பு - தமிழ் 

இயல் 1 - மொழி 

நம்மை அளப்போம்

பாடப்பகுதி பலவுள் தெரிக & குறுவினா

வினாக்களும் , விடைகளும்



**************     ************     ***********

பலவுள் தெரிக

1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்

அ) யாப்பருங்கலக்காரிகை 

ஆ) தண்டியலங்காரம்

இ) தொல்காப்பியம்

ஈ) நன்னூல்

விடை : இ ) தொல்காப்பியம் 

2. "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு " கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் 

க. பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது

உ .பொதிகையில் தோன்றியாது

ங . வள்ளல்களைத்  தந்தது

அ) க மட்டும் சரி 

ஆ ) க  உ இரண்டும் சரி

இ ) ங மட்டும் சரி 

ஈ) க , ங இரண்டும் சரி

விடை : ஈ ) க , ங இரண்டும் சரி 

3. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது 

தன்னேர் இலாத தமிழ்!" - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயம்

அ) அடி மோனை , அடி எதுகை

 ஆ) சீர் மோனை , சீர் எதுகை

இ) அடி எதுகை , சீர் மோனை

ஈ ) சீர் எதுகை , அடி மோனை

விடை : இ ) அடி எதுகை , சீர்மோனை

4. கருத்து 1: இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.

கருத்து 2 : தொடரமைப்பு , சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

அ) கருத்து 1 சரி

ஆ) கருத்து 2 சரி

இ) இரண்டு கருத்தும் சரி 

ஈ) கருத்து 1 சரி, 2 தவறு

விடை : இ. இரண்டு கருத்தும் சரி 

5 . பொருத்துக.

அ) தமிழ் அழகியல்: - 1) பரலி சு. நெல்லையப்பர்

ஆ) நிலவுப்பூ  - 2 ) தி.சு. நடராரன்

இ) கிடை - 3) சிற்பி பாலசுப்பிரமணியம்

ஈ ) உய்யும் வழி - 4) கி.ராஜநாராயணன்

அ) 4, 3, 2, 1 

ஆ ) 1 , 4 , 2 , 3

இ ) 2 , 4 ,  1 , 3

ஈ ) 2 , 3 , 4 , 1

விடை : ஈ ) 2 , 3 , 4 , 1 

***************   ***********   ************

குறுவினா

1 ) நடை அழகியல் பற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம்: 

                   அழகியலை உருவாக்குவதற்குத் தளம் அமைத்துத் தருகின்ற தொல்காப்பியம், இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணம் ஆகும். எழுத்தையும் சொல்லையும் போன்றே செய்யுளையும் ஓர் உள்ளமைப்பாகத் தொல்காப்பியம் கருதுகிறது.

*************    *************     ************

2 ) "படா அம் ஈத்த கெடாஅ நல்லிசைக்

கடாஅ யானைக் கலிமான் பேக"

இச்சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான  இலக்கணக் குறிப்புக்களையும் எடுத்து எழுதுக.

பதில்: ஓசை நயமிக்க சொற்களும் இலக்கணக் குறிப்பும்

1. படா அம்

2. கெடா அ

3, கடா அ

மூன்றும் செய்யுளிசை அளபெடைகள்

***********   **************   *************

3. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாடத் தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

              வியர்வை வீற்றிருக்கும்: மாலைக் கதிரவனின் மறைவின்போது தோன்றும் சிவந்த ஒளி வண்ணம் போல் உழைத்து உழைத்துப்பாடுபட்ட தொழிலாளர் தம் சிவந்த கரங்கள்.

               உழைத்தபின் மிகுதியைக் காட்டத் தோளில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் வீற்றிருக்கும். இவற்றை வியந்து பாடத் தமிழைத் தவிர வேறு துணை இல்லை எனச் சிற்பி கூறும் கவிதை வரிகள் இவை.

செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்

தம் கைகள் அதனைப் போல் சிவந்து நோக

தாம் உழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம்

விம்முகின்ற தோள்மீதில் முத்து முத்தாய்

வீற்றிருக்கும்.........”

**************     *************   *************

4. விடியல், வனப்பு . இரு சொற்களையும் ஒருங்கிணைக்கும் தொடர் அமைக்க.

பதில்: அதிகாலை விடியல் பொழுது ; அப்போது தோன்றும் கதிரவனின் வனப்புஅழகுக் காட்சியாம்.

************    *************     **************

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* ********

Post a Comment

0 Comments