12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - மொழி - கூடுதல் ஒரு மதிப்பெண் - பலவுள் தெரிக - வினா & விடை

 

12 ஆம் வகுப்பு - தமிழ்

இயல் - 1 , மொழி 

பலவுள் தெரிக ( கூடுதல் வினா & விடை )



*************    **************    *************

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1 ) வானமெல்லாம்  ------------ 

அ) செந்நிறத்துப் பூக்காடாம் 

ஆ) வண்ணப் பூக்காடாம்

இ) குங்குமப் பூக்காடாம்

ஈ) வெள்ளை நிறத்துப் பூக்காடாம்.

பதில் : அ) செந்நிறத்துப் பூக்காடாம்

2. “செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம்  வானமெல்லாம்” - இவ்வடியில் வந்துள்ள மோனை நயத்தை எடுத்து எழுதுக.

பதில் : செம்பரிதி, செந்நிறத்து - சீர்மோனை வந்துள்ளது

3. எம்மருமைச் செந்தமிழே உன்னை யல்லால் ------------  வேறுண்டோ?

அ) உற்ற துணை

ஆ ) உறு துணை 

இ) ஏற்ற துணை 

ஈ) மற்ற துணை

பதில் : இ) ஏற்ற துணை

4 ) பாண்டியரின் சங்கத்தில் -------------

அ) வீற்றிருந்தாய் 

ஆ) கொலுவிருந்தாய் 

இ) அமர்ந்திருந்தாய் 

ஈ) ஏற்றிருந்தாய்.

பதில் : ஆ) கொலுவிருந்தாய்

5. அறியப்பட்ட வரலாற்றுக் காலத்தின் தொடக்கமாகத் தோற்றம் தருவது

அ) இடைக்கால இலக்கியம் 

ஆ) பக்தி இலக்கியம்

இ) தற்கால இலக்கியம் 

ஈ) சங்க இலக்கியம்

பதில் : ஈ . சங்க இலக்கியம்

6 ) கலைப் படைப்பைப் பண்பாட்டின் இலட்சினையாகச் சித்திரிப்பதற்குத் தமிழ்மரபு முன்வந்திருக்கிறது. இது தமிழ் அழகியலின் ------------

அ) அகன்ற பரப்பு 

ஆ) நெடும்பரப்பு 

இ) விரிந்த பரப்பு 

ஈ) செறிந்த பரப்பு

பதில் : ஆ) நெடும் பரப்பு

7.சங்க இலக்கியத்தில் சொல்விளைச்சல்

------------   கிடக்கிறது.

அ) பூத்தும் புனைந்தும்

ஆ) மலர்ந்தும் உலர்ந்தும்

இ) மலர்ந்தும் கனிந்தும்

ஈ) கனிந்தும் மலர்ந்தும்

பதில் : இ) மலர்ந்தும் கனிந்தும்


8. ---------------   தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர்களில் தி.சு.நடராசன் குறிப்பிடத் தக்கவர்.

அ) திறனாய்வுக்கலையை
ஆ) படைப்புக் கலையை
இ) அறிவுக் கலையை
ஈ) ஆன்மீகக் கலையை

பதில் : அ) திறனாய்வுக் கலையை

9 ) ஏங்கொலிநீர் ஞாலத்து -----------

அ) அறியாமையை அகற்றும்
ஆ) இருளகற்றும்
இ) மடமை அகற்றும்
ஈ) மிடிமை அகற்றும்

பதில் : ஆ) இருளகற்றும்

10. பேசுவதைப் போலவே எழுத  எண்ணுவதே -------------  முதன்மையான காரணம்

அ) சொல்பிழைக்கு
ஆ) பொருள் பிழைக்கு
இ) எழுத்துப் பிழைக்கு
ஈ) கருத்துப் பிழைக்கு

பதில் :  இ ) எழுத்துப்பிழைக்கு

11 ) ணகர, னகர ஒற்றினை அடுத்து
-------------   வருவதில்லை.

அ) நகரமும் டகரமும்
ஆ) டகரமும் தகரமும்
இ) டகரமும் மகரமும்
ஈ) வகரமும் யகரமும்

பதில் :அ) நகரமும் டகரமும்

12. களம் - கலம் - இவற்றின் பொருள்

அ) பன்னிரண்டு, இடம் 
ஆ) இடம், பன்னிரண்டு
இ) இடம், இனம்
ஈ) இனம், இடம்

பதில் : ஆ) இடம், பன்னிரெண்டு

13. - இரண்டு கொம்புகளும் உணர்த்தும் ஒலி வேறுபாடு

அ) குறில், நெடில்
ஆ) நெடில், குறில்
இ) வல்லினம், மெல்லினம்
ஈ) மெல்லினம், வல்லினம்

பதில் : அ) குறில், நெடில்

***************     ***************    **********


வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* ********

Post a Comment

0 Comments