12 ஆம் வகுப்பு - தமிழ்
இயல் - 1 , மொழி
நம்மை அளப்போம்
பாடப்பகுதி - நெடுவினா
தம்பி நெல்லையப்பருக்கு - பாரதியின் கடிதம்
*************** *************** **********
2 ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க:
பாரதியின் கடிதம் - மொழிப்பற்று, சமூகப்பற்று
முன்னுரை
உறவுக்கு, அறிவுறுத்தலுக்கு, வேண்டுதலுக்கு, வணிகத்திற்கு என்று கடிதங்கள் எழுதுகையில் அவற்றின் மொழியாட்சி மாறுபடுகிறது. கடிதவடிவில் சொல்லவேண்டியவற்றை வெளியிடும் முறை உண்டு. கடிதங்களை இலக்கியமாக்கும் எழுத்தாளர்கள், மொழிக்கு அதன் வழியாகத் தனி அழகை உருவாக்கித் தருகிறார்கள். தனிப்பட எழுதும் கடிதங்களிலும் ஈர்க்கும் மொழியில் அழுத்தமான எண்ணங்களைத் தந்து அவற்றைப் பொது வெளிக்கு உரியதாக்குபவர்களும் இருக்கிறார்கள், காலத்தின் குரல்களான அக்கடிதங்களில் மொழி, வீறுபெறுகிறது.
தமிழில் புதுமை பூக்க வேண்டும்
நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை.
ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டுப் பாஷைகள் தெரிந்திருந்து, அந்தப் பாஷைப் பத்திரிகைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத்
தெரிந்து கொள்ள முடியுமானால் - தமிழ்நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும்! தமிழ்,
தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க! ஆனால் புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் - தமிழில்
ஏறிக்கொண்டே போக வேண்டும்.
சமுதாய உணர்வு
தம்பி - உள்ளமே உலகம் !
ஏறு! ஏறு! ஏறு! மேலே மேலே! மேலே!
நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி.
மொழிஉணர்வும், சமுதாய உணர்வும்
தம்பி - தமிழ்நாடு வாழ்க என்றெழுது.
தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது.
தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.
அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே நவீனக் கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது.
ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது.
அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது.
பெண்ணைத் தாழ்மை செய்தோன், கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது.
பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.
தொழில்கள், தொழில்கள் என்று கூவு.
வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக.
முயற்சிகள் ஓங்குக. ஸங்கீதம், சிற்பம், யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.
முடிவுரை
* ஓர் இனம் முன்னேற மொழி முன்னேற வேண்டும். மொழி முன்னேறினால் இனம் முன்னேறும். சமுதாயம் முன்னேறும்.
* சமுதாயத்தில் நம்மினும் மெலியாரை வலிவுபெறச் செய்ய மொழி கருவியாகப்
பயன்படுகிறது. “தமிழை வளர்ப்பதையே கடமையாகக் கொள்க” என்ற கடிதத்
தொடர் பாரதியின் பேச்சும், மூச்சும், எழுத்தும் தமிழ் என்பதற்கு அத்தாட்சியாகும்.
* “தமிழ் நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது” “ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது" "தொழில் தொழில்கள் என்று கூவு”, “வியாபாரம்
வளர்க” என்ற கடிதத் தொடர்கள் சமுதாயம் வலிவும் பொலிவும் பெற்று வளம்பெற வேண்டும் என்ற நோக்கில் உருவானவை.
************* ************** ********
பாரதியின் கடிதம் - காட்சிப்பதிவு விளக்கம்.
*************** ************* ***********
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
************** ************* ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
********* ************* ********
0 Comments