எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் 1- கற்கண்டு - எழுத்துகளின் பிறப்பு - காட்சிப்பதிவு & எழுத்தில் பாடமே படமாக !/ 8 TAMIL EYAL 1 - KARKANDU - EZHULTHUKALIN PIRAPPU

 

எட்டாம் வகுப்பு - தமிழ்

இயல் 1 - கற்கண்டு 

எழுத்துகளின் பிறப்பு



**************    ************   *************

எழுத்துகளின் பிறப்பு


வணக்கம் மாணவச் செல்வங்களே ! எழுத்துகளின் பிறப்பு என்ற பகுதியில் அமைந்த செய்திகளை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசிஐயா அவர்களின் காட்சிப்பதிவில் முதலில் காண்போம்.




                         அ, உ. க. ப -ஆகிய எழுத்துகளை ஒலித்துப் பாருங்கள். வாயைத் திறந்து ஒலித்தாலே அ என்னும் எழுத்து ஒலிக்கிறது. உ என்னும் எழுத்தை ஒலிக்கும்போது இதழ்கள் குவிகின்றன. நாக்கின் முதற்பகுதி மேல் அண்ணத்தில் ஒட்டும்போது க என்னும் எழுத்து பிறக்கிறது. ப என்னும் எழுத்து இதழ்கள் இரண்டும் ஒட்டுவதால் பிறக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு எழுத்துக்கும் பிறக்கும் இடமும் பிறக்கும் முயற்சியும் வெவ்வேறாக உள்ளன.

பிறப்பு

                    உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர். எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு , முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர்.

எழுத்துகளின் இடப்பிறப்பு

> உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

* வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

> மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

* இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.


*************    **************   ************

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    **********


Post a Comment

0 Comments