பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் 1 , 2 , 3 - அலகுத்தேர்வு
மதிப்பெண்கள் : 50
நேரம் : 1.30 மணி
************* ************* ************
I ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. I X 5 = 5
1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் ---------
அ) எந்+தமிழ்+நா
ஆ) எந்த+ தமிழ்+நா
இ) எம் + தமிழ்+நா
ஈ) எந்தம்+ தமிழ்+ நா
2. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை ---------
அ)கொழுந்து வகை
ஆஇலை வகை
இ)குலைவகை
ஈ)மணி வகை
3.'பெரிய மீசை சிரித்தார் ' வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது ?
அ)பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ)அன்மொழித்தொகை
ஈ)உம்மைத்தொகை
4. 'சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி' என்னும் அடியில் பாக்கம் என்பது _
அ) புத்தூர்
ஆ)மூதூர்
இ)பேரூர்
ஈ)சிற்றூர்
5. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.
அ) வேற்றுமை உருபு
ஆ)எழுவாய்
இ)உவம உருபு
ஈ)உரிச்சொல்
II ) குறு வினா
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி . 5 x 2 = 10
1. "மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!"
_ இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
2." உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்" _ இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக .
3.வசன கவிதை _ குறிப்பு வரைக.
4. மாஅல் - பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.
5. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
6. 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது . 'சிரித்துப் பேசினார் ' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
7. 'நச்சப் படாதவன் செல்வம்' - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
III ) சிறுவினா
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி. 2 x 3 = 6
1. அறிந்தது , அறியாதது, புரிந்தது புரியாதது ,தெரிந்தது தெரியாதது, பிறந்தது பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம் , அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை, எல்லாம் எமக்குத் தெரியும்.
இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
2. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
3. சோலைக் (பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க .
4.கவிதையைத் தொடர்க.
தண்ணீர் நிறைந்த குளம்
தவித்தபடி வெளிநீட்டும் கை
கரையில் கைபேசி படமெடுத்தபடி
....................................
....................................
...................................
IV ) நெடுவினா
ஏதேனும் ஒன்றிற்கு மட்டும் விடையளி.
1x 5 = 5
1.மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
(அல்லது )
2. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
V .செய்யுள் வடிவில் விடை தருக. 3 + 2 = 5
1.'சிறுதாம்பு' எனத்தொடங்கும் முல்லைப்பாட்டு மனப்பாடச் செய்யுளை அடிபிறழாமல் எழுதுக.
2. 'விடும்' என முடியும் குறட்பாவினை எழுதுக
VI ) ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் விடையளிக்க. 1 x 5 = 5
1.புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும் பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
(அல்லது)
2.அன்னமையா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப் பாட்டினை கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
VII ) சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குக. 4 x 1/2 = 2
தேன் ,விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய் , வான், பூ. , பொன் , மேகலை
Vlll கீழ்க்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களை கண்டுபிடித்து எழுதுக. 4 x 1/2 = 2
(குவியல், குலை, மந்தை, கட்டு)
கல் ,பழம் ,புல் ,ஆடு.
IX ) . எண்ணுப் பெயர்களைக் கண்டு தமிழ் எண்களில் எழுதுக. 2 x 1= 2
1. ஐந்து சால்பு ஊன்றிய தூண்.
2. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.
X . சொல்லைக் கண்டுபிடித்து புதிரை விடுவிக்க. 3 x l = 3
1. பழமைக்கு எதிரானது _ எழுதுகோலில் பயன்படும்.
2. ஓரெழுத்தில் சோலை _ இரண்டெழுத்தில் வனம்.
3. இருக்கும்போது உருவமில்லை _ இல்லாமல் உயிரினம் இல்லை.
(காடு, புதுமை, விண்மீன் ,காற்று, நறுமணம்)
Xl விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து
ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க. 6 x 1/2 = 3
இ _ கு ( பறவையிடம் இருப்பது)
கு _ தி ( சிவப்பு நிறத்தில் இருக்கும்)
வா _ ( மன்னரிடம் இருப்பது )
அ _ கா (தங்கைக்கு மூத்தவள் )
ம _ (அறிவின் மறுபெயர்)
பட _ (நீரில் செல்வது )
Xll இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக. 2 x 1 = 2
மலை _ மாலை, விடு _ வீடு.
************** *********** *************
வினா தயாரிப்பு
திருமதி.மகராசி , தமிழாசிரியை ,
கோவில்பட்டி , தூத்துக்குடி.
************** ************ ************
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments