ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - அலகுத் தேர்வு 1 - இயல் 1 - ஜூலை 2021 / 9 TAMIL EYAL 1 - UNIT TEST 1 - JULY 2021

 


                      வகுப்பு - 9 , தமிழ் 

               அலகுத் தேர்வு 1 - இயல் 1 

                                நேரம் : 1:30 நிமிடங்கள்

                                   மதிப்பெண்கள் : 50




*************     *************  **************

                     அலகுத் தேர்வு - 1                            

I ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க

                                                          5 x 1 = 5

1. தமிழ் விடு தூது..... என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

அ.தொடர்நிலைச் செய்யுள்.          

ஆ.புதுக்கவிதை 

இ.சிற்றிலக்கியம் 

ஈ.தனிப்பாடல்


2. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக .

அ. ........இனம் ஆ .........குணம் இ ..........வண்ணம்    ஈ..............வனப்பு 

க)மூன்று நூறு பத்து எட்டு 

உ)எட்டு  நூறு  பத்து  மூன்று

ங) பத்து நூறு எட்டு மூன்று

ச) நூறு பத்து எட்டு மூன்று


3. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!... இவ்வடிகளில் பயின்றுவரும் நயங்கள்_ 

அ)முரண் எதுகை இரட்டைத்தொடை

ஆ) இயைபு அளபெடை செந்தொடை

இ) மோனை எதுகை இயைபு 

ஈ)மோனை முரண் அந்தாதி


4. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தாமணி _ அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு- 

அ) வேற்றுமைத்தொகை 

ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 

இ) பண்புத் தொகை        

ஈ )வினைத் தொகை


5. சாப்ட்வேர் _   என்பதன் தமிழ்ச்சொல் எது?

அ)உலவி 

ஆ)செதுக்கி

இ) ஏவி 

ஈ )மென்பொருள்


II ) குறுவினா🌸🌸

எவையேனும் 5 வினாக்களுக்கு மட்டும் வடையளி.                                  5 x 2 = 10


1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

4. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் 5 தமிழ்ச் சொற்களைத் தருக .

5.அகமாய்ப்  புறமாய் இலக்கியங்கள் _ அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் _  இலக்கியங்களில் பாடுபொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?

6. செய்வினையைச்  செயப்பாட்டு வினையாக மாற்றும் துணை வினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

7. வீணையோடு வந்தாள், கிளியே பேசு தொடரின் வகையைச் சுட்டுக.


III ) சிறுவினா🌸🌸

எவையேனும்  இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி.

                                                                   2 x 4 =8

1.மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?

2. காலந்தோறும் தமிழ் மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது ?

3.வளரும் செல்வம் உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச் சொற்களைத் தொகுத்து அவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுக.

4.தன்வினை பிறவினை எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.


IV ) பாடலைப் படித்து  வினாக்களுக்கு விடை எழுதுக.

                                                                    5 x 1 = 5 


ஊனரசம் ஆறு அல்லால்  உண்டோ செவிகள் உணவு 

ஆன நவரசம் உண் டாயினாய் - ஏனோர்க்கு

அழியா வனப்பு ஒன்று அலது அதிகம்

 உண்டோ ஒழியா வனப்புஎட்டு உடையாய்.....


1. இப்பாடல் இடம் பெறும் நூல் எது?

2.இப்பாடலை இயற்றியவர் யார்?

3. உணவின் சுவைகள் எத்தனை?

4. வனப்புகள் எத்தனை?

5. ஊனரசம் என்பது எதைக் குறிக்கும்?


V ) நெடுவினா🌸🌸


ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடையளி.

                                                               1 x 5 = 5


1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க .

2.தூது அனுப்பத் தமிழே சிறந்தது _  தமிழ்விடு தூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.


VI ) அடிபிறழாமல் எழுதுக              1 x 6 = 6


 தித்திக்கும் தெள்அமுதாய்த் எனத் தொடங்கி.... மூன்று இனத்தும் உண்டோ வரை. தமிழ்விடு தூது பாடலை அடிபிறழாமல் எழுதவும்.


VII ) பொருத்தமான பெயரடைகளை  எழுதுக 

                                                                 4 x 1 = 4

(நல்ல ,பெரிய, இனிய ,கொடிய)


1. எல்லோருக்கும்..... வணக்கம் .

 2.அவன் .............. நண்பனாக இருக்கிறான்.

 3. ...........ஓவியமாக வரைந்து வா.

4. .............விலங்கிடம் பழகாதே !


VII ) மொழிபெயர்க்க.                      2 x 1= 2


1. Linguistics

2. Literature


VIII )  அகராதியில் காண்க            2 x 1 = 2

1. கிளத்தல் 

2.கேழ்பு


IX ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

                                                                1 x 3 = 3



*************    *****************   **********

  வினா உருவாக்கம் .

திருமதி.ச.மகராசி , தமிழாசிரியை , 

கோவில்பட்டி , தூத்துக்குடி.

****************    **************   ************

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410


**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

0 Comments