ஜூன் 5 , உலகச் சுற்றுச்சூழல் தின கவிதைப்போட்டி - இரண்டாம் பரிசு பெற்ற கவிதைகளும் , கவிஞர்களும் - எழுத்து & காட்சிப்பதிவாக.

 

GREEN TAMIL - You Tube & TAMILINBAM.IN

இணையதளம் இணைந்து நடத்திய .


 ஜூன் 5 - உலகச் சுற்றுச்சூழல் தின 

மாபெரும் கவிதைத் திருவிழா !

        இரண்டாமிடம் பெற்ற கவிதைகள்





********************    *******************



புலனத்தில் வரப்பெற்ற ஆயிரத்திற்கும் மேலான கவிதைகளில் TAMIL INBAM.IN இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கவிதைகள் விபரம் .

பள்ளி மாணவர் கவிதைகள் -  66

கல்லூரி மாணவர் கவிதைகள் - 60

ஆசிரியர் & ஆர்வலர் கவிதைகள் - 165 

மொத்தம்   = 291 கவிதைகள்.

வாழ்த்துகள் நண்பர்களே !


*******************    ********************

மரம் பேசுகிறேன்* 🌳


என்னை மண்ணாக்கி , 

மண்ணை மனையாக்கி , 

சோலையினைப் பாலையாக்கி , 

🔥தீயாய் உயிர்வளிக்கு  

அலைந்து திரிந்து , 

தீவிர வார்டில் சிகிச்சைப் பெற்று🔥

அலறி அடித்து ஆண்டவனிடம் போய்ச் 

சேருகிறவர்களின் கனிவான 

கவனத்திற்கு📢,

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

உங்கள் உயிரைக் காத்துக் கொள்ள 

ஓர் எளிய வாய்ப்பு!

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

உடனே தொடர்பு கொள்ளுங்கள்!

தொடர்புக்கு:

மரக்கன்றுகள்🌱, மண், தண்ணீர்💧🚿.

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

 (பின் குறிப்பு:வேண்டாம் என்பவர்கள்,

மண்ணை மட்டும் தொடர்பு கொள்ளவும்)

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱


கவிஞர்.ஆ.ரீனா செல்வப்பிரியா,‌‌‍

10ஆம் வகுப்பு , திருவள்ளூர் .








*********************    ******************



மரம் பேசுகிறேன்!


எந்தக் காக்கையோ. குருவியோ..

பழந்தின்று கொட்டை போட..

எச்சத்தில் தப்பி முளைத்தேன்!

என்னை.. எந்த தர்மராசனோ..

சாலையோரத்தில் நட்டு வைக்க..

உங்கள் பயணத்தைக் குளிர்வித்தேன்!

நீங்கள் இளைப்பாறி ஓய்வெடுக்க..

நிரந்தரமாய் நிழல் கொடுத்தேன்!

சமைத்துச் சுவைத்து மகிழ்ந்திட..

காயும் கனியும் விளைவித்தேன்!


உங்கள் வணிகத்தைப் பெருக்கிட..

விளம்பரத்தட்டி வைப்பதற்கு..

என் முதுகில் குத்துவது நியாயமா?

இரும்பு ஆணியை அடித்தடித்து..

என்னுடலைப் புண்ணாக்கி வதைத்து..

என்னுயிரைப் பறிப்பதுவும் தர்மமா?


திருப்பி அடிக்க முடியாதுன்னா?

தடுத்து விரட்ட இயலாதுன்னா?

என்னுடல் புண்ணாக வதைத்தீங்க?

இனியும் எம்மை வதைத்திட்டால்..

என்னுடலில் ஆணி அடித்திட்டால்..

உந்தன் வதையால் உயிர்த் துறவேன்!


பட்டமரமாகி பத்ரகாளி வேடமிட்டு..

உம்மைக் களேபரமும் செய்திடுவேன்!

சாது மிரண்டால் காடு கொள்ளாது..

பழமொழி உமக்கு தெரியாதோ?

எம்மை வைத்து வளர்த்தால்தான்..

உம்சந்ததி வாழ மழை தருவேன்!


பெ.விவேகா, பி.ஏ.,எல்.எல்.பி.,

முதலாமாண்டு மாணவி,

சேலம் மத்திய சட்டக்கல்லுாரி











***********************    *******************






***********************  *******************


மரம் நடு... மனம்தொடு


மண்ணில் முகிழ்த்த தாவரம் !

மனிதா!  உனக்குப்  பெருவரம் !      

விதைக்குள் இருக்கு  விருட்சம்  !   

விதைத்தால் பூமிக்கு  சுபிட்சம் !

                   

பசுமை   கொண்ட நிறந்தான் !

அதனை வளர்ப்பது   அறந்தான் !

புவியின்  வரமே   மரந்தான் !

மனிதன்  இதனை  மறந்தான் !

                

பசுமையை  இன்று  துறந்தான் !

சூழல் பாழ்பட்டு  இறந்தான் !

 மரங்கள் வளர்க்கக்  குழிகள் எடு !

மனிதன்    வாழ வழியை   விடு !


காற்றைத்  தூய்மை செய்கிறது !

மழையாய் மண்ணில் பெய்கிறது !

மரமே மரமே ஓ மரமே !

பிறப்பில்   தொட்டில்  நீயானாய்!

          

இறப்பில் கட்டிலும் நீயானாய்      !

நிழலைத்  தந்து  நிறைவானாய் !

அழலைத்   தந்து அடிசில் ஆனாய் !

மனிதா!   மனிதா ! ஓ மனிதா !

             

மரம் நடுவாய் மரத்தைக் காக்க !

மரம்  நடுவாய்   மழை  பெற !

மரம்  நடுவாய்  மனிதம் வளர !

மரம்  நடுவாய்  மன்பதை  காக்க. !



கவிஞர்  . V. மீனாட்சி , பட்டதாரி தமிழ் ஆசிரியை , 

அரசு உயர்நிலைப்பள்ளி

    ஏனாத்தூர்

காஞ்சிபுரம் மாவட்டம்












********************   ********************



நன்றிக்குரிய நடுவர் பெருமக்கள்

1 ) பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள் .
( முதுகலை தமிழாசிரியர் & தலைமையாசிரியர் , இராயப்பன் பட்டி , 
தேனி.)

2 ) கவிஞர்.மணி மீனாட்சி சுந்தரம் , 
தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி , 
சருகுவலையபட்டி .மதுரை.

3 ) கவிஞர்.அ.கிருஷ்ணவேணி , 
தமிழாசிரியை , அ.உ.நி.பள்ளி , 
கருப்பட்டி , மதுரை.

4 ) கவிஞர்.நாகேந்திரன் , தமிழாசிரியர் , 
அ.உ.நி.பள்ளி , விரகனூர் , மதுரை.

மற்றுமோர் மாபெரும் கவிதைத் திருவிழாவில் சந்திப்போம் கவிஞர்களே ! வாழ்த்துகள் .

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
97861 41410

************************   ******************

Post a Comment

0 Comments