எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 8
உரைநடை உலகம் - அயோத்திதாசர் சிந்தனைகள்
பயிற்சித்தாள் - 30
******************** **********************
1.தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
அ) தந்தை பெரியார்
ஆ) அண்ணல் அம்பேத்கர்
இ) அயோத்திதாசர்
ஈ ) காந்தியடிகள்
விடை இ. அயோத்திதாசர்
2. கீழ்க்காணும் குறிப்பை விரித்து எழுதுக. (பக்.173)
1907 சென்னை ஒரு பைசாத் தமிழன் - தமிழன் மக்களுக்கு நீதி நேர்மை - தமிழ்நாடு மைசூர், கோலார், ஐதராபாத், ரங்கூன். மலேசியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா - சீர்திருத்த சிந்தனைகள்
விடை :
1907 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து ஒரு பைசாத் தமிழன் என்ற நாளிதழ் அயோத்திதாசரால் வெளியிடப்
பட்டது. பின்னாளில்' தமிழன்' என்ற பெயரில் மக்களுக்கு நீதி, நேர்மை போதிக்கும் நாளிதமாகச் செயல் பட்டது. மைசூர், கோலார், தேராபாத், ரேங்கன், தமிழர்களும் பகுதுதறிவுச் சிந்தனை பெற்றனர்.
3. விடுபட்ட கட்டங்களை நிரப்புக
இயற்பெயர் : காத்தவராயன்
அறிந்த மொழிகள் : பாலி, வடமொழி,
ஆங்கிலம்
ஐந்து பண்புகள் : நல்ல சிந்தனை, சிறப்பானசெயல், உயர்வான பேச்சு , ,உவப்பான எழுத்து
கற்ற துறை : இலக்கியம், இலக்கணம், கணிதம்.
சங்கம் - திராவிட மகாஜன சங்கம்
4. அயோத்திதாசரை நேர்காணல் செய்வதற்கேற்ற ஐந்து வினாக்களை உருவாக்குக.
வினா 1 : வணக்கம் ஐயா. தங்களுக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் வந்தது எப்படி ?
வினா 2 : பள்ளிப் பருவத்தில் தாங்கள் சந்தித்த இன்னல்கள் என்ன?
வினா 3 : ஒருபைசாத் தமிழன் இதழ் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
வினா 4 : எப்படிப்பட்ட தலைவர் இன்று வேண்டும்?
வினா 5 - விடுதலை என்பது எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்?
5. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க(பக்.174)
ஒரு குடும்பத்தில் அன்பும் ஆறுதலும் இருந்தால் அக்குடும்பம் வாழும் ஊர்
முழுவதும் அன்பும் ஆறுதலும் பெறும்; ஊர்கள் அன்பும் ஆறுதலும் பெறுமானால் நாடு முழுவதும் அன்பும் ஆறுதலும் பெற்றுத் திகழும்; இத்தகைய நாட்டில் புலியும் பசுவும்
ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும் என்பவை அயோத்திதாசர் கருத்துகள்.
வினாக்கள் :
1. பத்தியில் உம் வெளிப்படையாக வந்துள்ள சொற்களை எடுத்து எழுதுக.
விடை : அன்பும் ஆறுதலும், புலியும் பசுவும்.
2 .உரைப்பத்தியில் இடம்பெற்றுள்ள இணைப்புச்சொல் எது?
விடை : ஆனால்
3. உரைப்பத்தியில் இடம்பெற்றுள்ள மரபுச்சொல்லை எடுத்து எழுதுக.
விடை அருந்தும்
6 ) தொடரில் அமைத்து எழுதுக.
1. ஆணித்தரம்
எனது கருத்துகளை ஆணித்தரமாகக் கூறினேன்
2 . சிந்தனையாளர்
அயோத்திதாசர் சிறந்த சிந்தனையாளர்.
7. எதிச்சொல் எழுதுக.
கோபம் X சாந்தம்
பொய் x மெய்
துன்பம் X இன்பம்
8 ) கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
நன்னெறி - நன்மை + நெறி
நீர்த்துறை - நீர+ துறை
9. 'நிலவு நாளும் மலர்ந்து முழுநிலவாகி ஒளி வீசுவதுபோல் கல்வி நிறுவனங்களில்
அறிவைவளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்படவேண்டும்'.-இத்தொடரில் இடம்பெற்றுள்ள உவமையை விளக்குக.
விடை : நிலவு நாளும் மலர்ந்து முழு நிலவாகி ஒளி வீசுவது போல்
10. நீ அறிந்த சிந்தனையாளர் இருவரின் பெயரை எழுதுக.
விடை :
1. விவேகானந்தர்
2. அம்பேத்கர்
3' தந்தை பெரியார்
********************** ********************
மேலே உள்ள வினாக்களை காட்சிப் பதிவில் விளக்கத்துடன் கண்டு மகிழலாம்.
************************** *****************
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410
********************** ********************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் உரைத்தொடர்.
GREENTAMIL.IN - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
************************* ************
0 Comments