எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - பயிற்சித்தாள் - 25 - பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் / 8 TAMIL WORKSHEET -25

 

வகுப்பு - 8    பாடம்  - தமிழ் 


பயிற்சித்தாள் - 25      இயல் 7

உரைநடை உலகம் - பாரத ரத்னா எம். ஜி. இராமச்சந்திரன்

( வரி வடிவம் & காட்சிப் பதிவு விளக்கம் )




**********************   ******************

1 ) 'பாரத ரத்னா'- என்னும் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ) தாமரைத் திரு

ஆ ) தாமரை அணி

இ ) இந்திய மாமணி

ஈ) தாமரைச் செவ்வணி

விடை: இ )  இந்திய மாமணி

2. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

அ) பன்முகத்திறமையாளர்

விடை: இன்றைய மாணவர்கள் பன்முகத் திறமையாளர்களாக உருவாகிறார்கள்.

ஆ) முதலமைச்சர்

விடை: பெருந்தலைவர் காமராசர் தமிழகத்தின் முன்னாள் முதமைச்சர்

இ) சத்துணவு 

விடை: புரட்சித் தலைவர். எம். ஜி. ஆர். சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

ஈ) திரைப்படத்துறை

விடை: எம்.ஜி, ஆர். திரைப்படத்துறையில் கொடிகட்டிப் பறந்தார்.

உ) இயற்கைச் சீற்றம்

விடை: அவ்வப்போது உண்டாகும் இயற்கைச் சீற்றம் பேரிழப்பை   உருவாக்குகிறது.


3. பின்வரும் தொடர்களைச் சரியான இணைப்புச் சொல்லைக்கொண்டு
தொடராக்குக.

(மேலும், எனவே, ஆகையால், ஆனால், அதனால்)

அ) எம்.ஜி.ஆர். தாம் பெற்ற செல்வத்தை வாரி வழங்கினார். அவர் பொன்மனச்
செம்மல் எனப் புகழப்பட்டார்.

விடை!

எம்.ஜி.ஆர். தாம் பெற்ற செல்வத்தை வாரி வழங்கினார். எனவே, அவர் பொன்மனச்செம்மல் எனப் புகழப்பட்டார்.

ஆ) எம்.ஜி.ஆர்., தான் ஏற்று
நடித்த கதைமாந்தர்கள் மூலம் மக்களின்
முன்னேற்றத்துக்குரிய கருத்துகளை எடுத்துரைத்தார். மக்கள் அவரைப் புரட்சி
நடிகர்,மக்கள் திலகம் என்றெல்லாம் போற்றினர்.

விடை :

எம் .ஜி . ஆர். தான் ஏற்று நடித்த கதைமார்கள் மூலம் மக்களின் 
முன்னேற்றத்துக்குரிய கருத்துகளை எடுத்துரைத்தார். ஆகையால் மக்கள் அவரைப் புரட்சி நடிகர் , மக்கள் திலகம் என்றெல்லாம் போற்றினர்.

இ) சாலையில், சூடு தாங்காமல் நடந்த மூதாட்டிக்கும் சிறுமிக்கும் தனது
துணைவியார் மற்றும் உறவினரின் காலணிகளைக் கொடுக்கச்செய்தார்.
அவர்களுக்குப் பணமும் கொடுத்தார்.

விடை: சாலையில் சூடு தாங்காமல் நடந்த தோட்டிக்கும் சிறுமிக்கும்
தனது துணைவயார் மற்றும் உறவனரின் காலணிகளைக் கொடுக்க
செய்தார். மேலும் அவர்களுக்குப் பணம் கொடுத்தார்.

ஈ) எம்.ஜி.ஆர். படைவீரர் நலச்சங்கத்திற்கு நன்கொடை வழங்க விரும்பினார்.அப்பொழுது அவரிடம் பணம் இல்லை.

விடை: எம். ஜி. ஆர். படைவீரர் நலச்சங்கத்திற்கு நன்கொடை வழங்க
விரும்பினார். ஆனால், அப்போது அவரிடம் பணம் இல்ல.

உ) எம்.ஜி.ஆர். குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தார். எம்.ஜி.ஆரின் தாயார் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து கும்பகோணத்தில் குடியேறினார்.

விடை: எம் ஜி.ஆர். குழந்தையாக இருக்கும்போதே தந்தையை
இழந்தார். அதனால் எம்.ஜி.ஆரின் தாயார் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து கும்பகோணத்தில் குடியேறினார்.

4, அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களை இணைத்துத் தொடரை விரிவாக்குக.

அ) உழைத்தல் வேண்டும்.(நாளும், அயராது, கடுமையாக, நேர்மையாக)

விடை: நாளும் அயராது கடுமையாகவும், நேர்மையாகவும் உழைத்தல் வேண்டும்,

ஆ) கொடுத்தல் நன்று. (வறியவர்க்கு, இயன்ற அளவு,மகிழ்வோடு)

இயன்ற அளவு வறியவர்க்கு மகிழ்வோடு கொடுத்தல் நன்று. 


5. குறிப்புகளைக்கொண்டு பத்தியமைக்க. (பக், 153)

எம்.ஜி.ஆர். - தமிழ்வளர்ச்சி - தந்தை பெரியார் - எழுத்துச் சீர்திருத்தம் - ஐந்தாம்
உலகத் தமிழ் மாநாடு -தஞ்சை- தமிழ்ப்பல்கலைக்கழகம்.

விடை:

    எம்.ஜி.ஆர். தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை ஆற்றினார். தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப் படுத்தித் தமழ் எழுத்து    முறையை எளிமைப் படுத்தினார். மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார். தந்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப்  பல்கலைக்கழகத்தைத் தோற்றிவந்தார்.

மாணவச் செல்வங்களே !
வாசித்துக் கொண்டிருக்கும் இந்தப் பயிற்சித்தாளை கீழ்க்காணும் காட்சிப் பதிவில் விரிவான விளக்கத்துடன் கண்டு மகிழலாம்.




6. உரைப்பகுதியில் அடிக்கோடிட்ட பேச்சுவழக்குச் சொற்களை   எழுத்து வழக்குச் சொற்களாக மாற்றுக.

"வீட்டு வேலை செஞ்சு அம்மா கொண்டுவருகிற பணம் நமக்கு ஒருவேளை சாப்பாட்டுக்குத்தான் போதுமானதா இருக்கு. அம்மா என்ன செய்வாங்க பாவம்.வீட்டுவேலைக்குப் போயிருக்கிற அம்மா, மாலையில் எப்படியும் அரிசியோடு வருவாங்க. நமக்கு ஏதாவது உணவு சமைச்சுத் தருவாங்க" என்று தம்பியை
அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறுகிறான் அண்ணன்.

விடை:

செஞ்சு - செய்து
வருவாங்க - வருவார்கள்
போதுமானதா - போதுமானதாக
 சமைச்சு - சமைத்துத்
செய்வாங்க - செய்வார்கள்
தருவாங்க - தருவார்கள்
போயிருக்கிற - போய் இருக்குற

7. கீழ்க்காணும் உரைப்பகுதியை உரையாடலாக மாற்றுக.

எம்.ஜி.ஆர். ஒருமுறை வெளியூரிலிருந்து மகிழ்வுந்தில் சென்னைக்கு வந்து    கொண்டிருந்தார். வழியில் மூதாட்டி ஒருவரும் பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் தலையில் புல்கட்டுகளைச் சுமந்தவாறு கால்களில் காலணிகள் இல்லாமல் சென்றுகொண்டிருந்தனர். சாலையின் சூடு பொறுக்கமுடியாமல் அவர்கள்சாலையோர மரநிழலில் நிற்பதும் ஓடுவதுமாக இருந்ததைக் கண்ட எம்.ஜி.ஆர்.உடனே  தமது மகிழ்வுந்தை நிறுத்தச்செய்தார். உடன்வந்த தமது துணைவியாரது
காலணியையும் உறவினரான பெண்ணின் காலணியையும் அவர்களிடம் கொடுக்கச்செய்தார்.


விடை:

எம்.ஜி. ஆர் : ஏன் காலணி இல்லாமல் நடக்கிறீர்கள் ?
மூதாட்டி : காலணி வாங்கப் பணம் இல்லை ஐயா

எம்.ஜி. ஆர் : இதோ, எனது துணைவியார் மற்றும் உறவினரின் காலணியை அணிந்து செல்லுங்கள்,

மூதாட்டி : நன்றி ஐயா,

எம்.ஜி.ஆர். மகிழ்ச்சி அம்மா, சென்று வாருங்கள்

8. மாறியுள்ள தொடர்களை முறைப்படுத்திப் பத்தியமைக்க.


அ ) சென்னை திரும்பியதும்
முதல் வேளையாக அத்தொகையைத்
திருப்பிக்கொடுத்தார்.

ஆ) எம்.ஜி.ஆர். ஒருமுறை படப்பிடிப்பிற்காகக் காஷ்மீருக்குச் சென்றிருந்தார்.

இ) அதற்கு ஒப்புக்கொண்ட அவர் அச்சங்கத்திற்கு நன்கொடை வழங்க
விரும்பினார்.

ஈ) அங்கிருந்த இந்தியப் படைவீரர் நலச்சங்கத்தினர் தமது சங்க விழாவிற்கு
எம்.ஜி.ஆர். வருகைதர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

உ ) எனவே, அங்கு தங்கியிருந்த தமிழ்நாட்டுத் தொழிலதிபர் ஒருவரிடம்
பெருந்தொகையைக் கடனாகப் பெற்று அதனை நன்கொடையாக வழங்கினார்.

ஊ) ஆனால், அப்பொழுது அவரிடம் பணம் இல்லை.

விடை:

1 ) எம்.ஜி.ஆர். ஒருமுறை படப்பிடிப்பிற்காகக் காஷ்மீருக்குச் சென்றிருந்தார்.

2 )  அங்கிருந்த இந்தியப் படைவீரர் நலச்சங்கத்தினர் தமது சங்க விழாவிற்கு
எம்.ஜி.ஆர். வருகைதர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

3 ) அதற்கு ஒப்புக்கொண்ட அவர் அச்சங்கத்திற்கு நன்கொடை வழங்க
விரும்பினார்.

4 ) ஆனால், அப்பொழுது அவரிடம் பணம் இல்லை.

5 ) எனவே, அங்கு தங்கியிருந்த தமிழ்நாட்டுத் தொழிலதிபர் ஒருவரிடம்
பெருந்தொகையைக் கடனாகப் பெற்று அதனை நன்கொடையாக வழங்கினார்

6 ) சென்னை திரும்பியதும்
முதல் வேளையாக அத்தொகையைத்
திருப்பிக்கொடுத்தார்.


**********************   *******************


மு.மகேந்திர பாபு , மதுரை - 97861 41410

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் உரைத்தொடர்.


GREENTAMIL.IN - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.



Post a Comment

1 Comments