ஆறாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் - 5 , இயல் 1 மதிப்பீடு / 6 TAMIL WORKSHEET 5 - QUESTION & ANSWER

 

            ஆறாம்  வகுப்பு  - தமிழ் 

                            இயல் - 1 

            பயிற்சித்தாள் - 5 - மதிப்பீடு.



*********************   **********************

1 ) பின்வருவனவற்றுள் தமிழ்மொழி எதனை அகற்றும் திறன் பெற்றது?

அ) மெய்

ஆ பொய்

இ) நோய்

ஈ ) காய்

விடை: ஆ) பொய்

2. கீழ்க்காண்பனவற்றுள் உண்மை எதனைப் போன்றது என்பதை எடுத்தெழுதுக.

அ) உடல்

ஆ) தலை

இ) இதயம்

ஈ )உயிர்

விடை:  ஈ ) உயிர்

3 ) சரியானதைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கண் இமைக்க அல்லது கை நொடிக்க ஆகும் கால அளவை ----------- என்று அழைப்பர்.

அ ) மாத்திரை

ஆ) குறில்

இ) நெடில்

ஈ) மெய்

விடை: அ. மாத்திரை

4, சரியா? தவறா? எனக் குறிப்பிடுக.

அ) தமிழ்மொழி இன்பம் தரும் பாடல்கள் நிறைந்தது.      (சரி )

ஆ) தமிழ்நாடு சிறந்து வாழ்வதற்கான வழிகளைக் காட்டுவது தமிழ்மொழியாகும்.  ( சரி

5. கோடிட்ட இடத்தைக் குறிப்புகளுக்கேற்ப நிரப்புக.

அ) யாமறிந்த = யாம் + அறிந்த 

(பிரித்து எழுதுக)

ஆ) ஊற்று + ஆகிய = ஊற்றாகிய  (சேர்த்து எழுதுக)

6. தமிழில் யாருடைய பாடல்கள் நிறைந்திருக்கும் எனப் பெருஞ்சித்திரனார் கூறுகிறார்?

விடை: அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்திருக்கம் எனப் பெருகசித்திரனார் கூறுகிறார்.

7. தொடரில் அமைத்து எழுதுக.

இன்பம்

விடை: தமிழ் படிப்பதால் இன்பம் உண்டாகும்.

ஆ) உண்மை

விடை : நாம் அனைவரிடமும உண்மை பேச வேண்டும்.

இ) மொழி

விடை: நம் தாய் மொழி தமிழ்

8. வன்மையாக ஒலிக்கும் மெய் எழுத்துகள் யாவை?

விடை  - க் , ச் ,ட் , த் ,ப் , ற்

9. பின்வரும் தொடர்களில் உரிய நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.

மூத்தமொழியான தமிழ் கணினி, இணையம் போன்றவற்றில் பயன்படத்தக்க வகையில் புதுமொழியாகவும் திகழ்கிறது இத்தகு சிறப்புமிக்க மொழியைக் கற்பது நமக்குப் பெருமையல்லவா

விடை :

        மூத்த மொழியான தமிழ் கணினி, இணையம் போன்றவற்றில்    பயன் படத்தக்க வகையில் புதுமைாழியாகவும் திகழ்கிறது. இத்தகு சிறப்பு மிக்க மொழியைக் கற்பது நமக்குப்  பெருமையல்லவா ?


10. இன்பத்தமிழ் பாடலின் பொருளை உன் சொந்த நடையில் எழுதுக. (பக். 3 ) 

விடை:

1 )தமிழுக்கு அமுது என்று பெயர். இன்பம் தரும் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்க இணையானது.

2. தமிழக்கு நிலவு என்று பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூகவளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.

3- தமிழுக்கு மணம் என்று பெயர். அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்  பட்ட ஊர் ஆகும்.

4. தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது, நல்ல புகழ் மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல்போன்ற கருவியாகும்.

*************************    *****************


மேலே உள்ள வினாக்களுக்கான விடைகளை இனிய , எளிய விளக்கத்துடன் இந்தக் காட்சிப் பதிவில் கண்டு மகிழலாம்.



*********************     *******************


வாழ்த்துகள் நண்பர்களே ! 
பார்த்ததற்கும் , பகிர்ந்ததற்கும் நன்றி !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

உங்கள் வாட்சாப் குழுவில் 97861 41410 என்ற எண்ணை இணைத்து அனைவரும் பயன்பெறச்செய்யலாம் ஆசிரிய நண்பர்களே !

**********************    *********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  *************     *****


Post a Comment

0 Comments