ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 1
பயிற்சித்தாள் - 3
கவிதைப்பேழை - தமிழ்விடு தூது
********************** *****************
1.'வாயில் இலக்கியம்' எனவும் 'சந்து இலக்கியம் ' எனவும் வழங்கப்படும் சிற்றிலக்கியத்தைத் தெரிவுசெய்க.
அ) பள்ளு
ஆ) தூது
இ) குறவஞ்சி
ஈ) பிள்ளைத்தமிழ்
விடை - ஆ ) தூது
2. பின்வரும் தொடர்களுக்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.
(சுவைகள், வண்ணங்கள், வனப்புகள், குணங்கள்)
அ) சத்துவம், இராசசம், தாமசம் ஆகிய மூன்று குணங்கள்
ஆ)வெண்மை, செம்மை,பொன்மை, போன்ற ஐந்து வண்ணங்கள்
இ) அம்மை, அழகு, தொன்மை போன்ற எட்டு வனப்புகள் .
ஈ) வீரம், அச்சம், வியப்பு போன்ற ஒன்பது
சுவைகள்.
3. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.
"உண்ணப்படும்தேனே உன்னோடு உவந்து உரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்..........
அடி எதுகை -உண்ணப்
விண்ணப்பம் - ண் அடிஎதுகை
சீர் எதுகை - ண்
விண்ணப்பம் - ண்
உண்டு
சீர் மோனை : உ
உண்ண
உன்னோடு
உவந்து
பாடலைப்படித்து 4 முதல் 6வரையிலான வினாக்களுக்கு விடையளிக்க.
"இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்
கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
தனிமைச்சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்கு மேதமிழ் மீதில்"
4. பாடலில் கனியைப் பிழிந்திட்ட சாறு எனவும் அமுது எனவும் குறிப்பிடப்படுவது எது?
தமிழ்மொழி
5. பாடலில் இடம்பெற்றுள்ள அடுக்குத்தொடரை எழுதுக.
நனியுண்டு நனியுண்டு
6. வேறெங்கும் யாம் கண்டதில்லை எனக்கவிஞர் எதைக் குறிப்பிடுகிறார்?
தமிழ் மொழியில் உள்ள சுவையுள்ள சொற்களைப் போல வேறு எந்தமொழியிலும் கண்டதில் எனக் கவிஞர் குறிப்பிடுகிறார்.
7. மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக.
"யாமரிந்த மொழிகலிலே தமிள்மொழிபோல்
இனிதாவது எங்கும் கானோம்"
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிவது போல்
இனிதாவது எங்கும்காணோம்.
8. "முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார் நீ" - இவ்வடியில் உள்ள பெற்றார்' என்னும் சொல்லை வினையெச்சமாக்கித் தொடரமைக்க.
முக்குணம் பெற்ற முற்றும் உணர்ந்த தேவர்கள்.
9. பின்வரும் செய்யுளடிகளில் இடம்பெற்றுள்ள இரட்டைக் காப்பியங்களைக் கண்டறிந்து எழுதுக.
"காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்ப"
சிலப்பதிகாரம் , மணிமேகலை
10. பொருள் விளக்கத்திற்கேற்ற பாடலடியைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பொருள் விளக்கம்
இனிக்கும் தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் மேலான விடுதலை தரும் கனியே!இயல், இசை, நாடகம் என மூன்றாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே!
பாடல் அடிகள்
"தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக்
முத்தமிழே"
கனியே என்
"வந்து என்றும் சிந்தாமணியாய் இருந்த உனைச் சிந்து என்று சொல்லியநாச்சிந்துமே"
விடை - தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக்
முத்தமிழே"
11. தூது இலக்கியத்தின் விளக்கத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் தன் அன்பைப் புலப்படுத்தி, தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக 'மாலையை வாங்கி வருமாறு' அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூதுவிடுவதாகக்கலிவெண்பாவால் இயற்றப்படுவது தூது இலக்கியம் ஆகும். அந்தவகையில் மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூது அனுப்பியதால்
இது தமிழ்விடுதூது என்று பெயர் பெற்றது.
அ) தமிழைத் தூதாக அனுப்புவதால் தமிழ் விடுதூது எனப்பெயர் பெற்றுள்ளது.
ஆ) அன்னத்தைத் தூதாக அனுப்பினால் அத்தூது இலக்கியம் என்ன பெயர் பெறும்?
அன்னம்விடுதூது
******************** **********************
மேலே உள்ள வினாக்களுக்கான விடைகளை இனிய , எளிய விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்.
********************** ********************
பாருங்கள் ! கருத்துகளைக் கூறுங்கள் ! நண்பர்களுக்கும் பகிருங்கள் .
நன்றி - திரு.மணி மீனாட்சி சுந்தரம் , தமிழாசிரியர் , மதுரை.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410
********************** ********************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம்
உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
************************* ***************
0 Comments