ஆறாம் வகுப்பு - தமிழ்
பயிற்சித்தாள் - 3
இயல் - 1
உரைநடை உலகம் - வளர்தமிழ்
வினாக்களும் & விடைகளும்
******************** *********************
1. 'எனது நண்பன் Facebook-இல் கணக்கு வைத்திருப்பதாகக் கூறினான்'.
இத்தொடரில் உள்ள ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் யாது?
அ) இணையம்
ஆ) முகநூல்
இ) புலனம்
ஈ) வங்கி
விடை: ஆ ) முகநூல்
2. 'என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்' - என்னும் பாரதியாரின் பாடலடிகள் உணர்த்தும் கருத்தமைந்த சரியான தொடரை எடுத்தெழுதுக.
அ) தமிழின் வளமை
ஆ) தமிழின் தொன்மை
இ) தமிழின் எளிமை
ஈ) தமிழின் புதுமை
விடை : இ ) தமிழின் தொன்மை
3. பத்தியைப் படித்துக் கோடிட்ட இடங்களை நிரப்புக.
மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எண்களின்
அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். தொல்காப்பியம், நன்னூல் போன்றவை நாம் படிப்பதற்காக எழுதப்பட்டவை. ஆயினும் அவை கணினிமொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தையும் பெற்றுள்ளன.
அ) கணினி மொழி எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகிறது.
ஆ) கணினி மொழிக்கேற்ற நுட்பமான வடிவத்தை தொல்காப்பியம், நன்னூல்
போன்ற நூல்கள் பெற்றுள்ளன.
4. பொருத்துக.
விடை
அ ) மா - இலை
ஆ ) மல்லி - தழை
இ ) பனை - ஓலை
ஈ ) அருகு - புல்
உ ) பசலை - கீரை
5 ) மேற்கண்ட படத்தை உற்றுநோக்கி, கீழ்க்காணும் படத்திலுள்ள பூக்களின் பல்வேறு நிலைகளுக்கான பெயர்களை எழுதுக.
1 முகை
2 மொட்டு
3 . மலர்
4 அலர்
6. துளிப்பா, புதுக்கவிதை, செய்யுள் ஆகிய கவிதை வடிவங்களுள் கீழ்க்காணும் கவிதை வடிவம் எவ்வகையில் அடங்கும்?
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
விடை: செய்யுள்
7. "தமிழென் கிளவியும் அதனோ ரற்றே" -- இத்தொடர் இடம்பெறும் இலக்கியம் எது?
அதன் சிறப்புயாது?
விடை: தொல்காப்பியம்
தமிழ் மொழியன் மிகப்பழமையான நூல்
8. "ஓர் எழுத்தே ஒரு சொல்லாகிப் பொருள் தருவதும் உண்டு. ஒரு சொல் பல பொருளைக் குறித்து வருவதும் உண்டு. சான்றாக 'மா' என்னும் ஒரு சொல் மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல்,.வண்டு போன்ற பல பொருள்களைத் தருகிறது"
இது போன்று பலபொருள் குறித்து வரும் ஒரு சொல்லிற்கு ஓர் எடுத்துக்காட்டுத்
தருக.
விடை: பூமி - உலகம், புவி, பார், வையம், அகிலம், தரணி.
9. 'தமிழ் வளமையான மொழி' என்ற தலைப்பில், தமிழ் இலக்கிய, இலக்கண நூல் வளம், சொல்வளம், சொற்பொருள் வளம் போன்ற கருத்துகளுடன் சொந்த நடையில் இரண்டு மணித்துளி பேசுவதற்கேற்ற உரை ஒன்றனை எழுதுக.
விடை:
தமிழ் வளமை மிக்க மொழி . தொல்காப்பியம், நன்னூல் போன்ற இரக்கண நூற்கள் மிகுந்த மொழி தமிழ்.
தமிழ் மொழி, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க
இலக்கியங்களைக் கொண்டது. திருக்குறள், நாலடியார்
போன்ற அறநூல்களைக் கொண்டது.
10. 'தமிழ்மொழியின் மேன்மை' என்ற தலைப்பில், கீழ்க்காணும் குறிப்புச்சட்டகத்தை
அடிப்படையாகக் கொண்டு கட்டுரை ஒன்று வரைக. (விடையைக் குறிப்பேட்டில்
எழுதுக)
குறிப்புச்சட்டகம்
1)முன்னுரை
2) மூத்தமொழி
3) எளியமொழி
4) சீர்மைமொழி
5) வளமைமொழி
6) வளர்மொழி
7) முடிவுரை
மாணவர்களே ! மேலே உள்ள குறிப்புகளைக் கொண்டு உங்களுக்குத்.தெரிந்த பாடச்செய்திகளோடு நீங்களே இக்கட்டுரையை உருவாக்குங்கள்.
மேலே உள்ள வினாக்களின் விடைகளை காட்சிப் பதிவாகக் கண்டு மகிழலாம்.
******************** ********************
வாழ்த்துகள் நண்பர்களே !
பார்த்ததற்கும் , பகிர்ந்ததற்கும் நன்றி !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
உங்கள் வாட்சாப் குழுவில் 97861 41410 என்ற எண்ணை இணைத்து அனைவரும் பயன்பெறச்செய்யலாம் ஆசிரிய நண்பர்களே !
********************** *********************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
********* ************* *******
0 Comments