எட்டாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் - 28 - ஒன்றே குலம் / 8 TAMIL WORKSHEET - 28 - QUESTION & ANSWER

 

எட்டாம் வகுப்பு - தமிழ் 

                  இயல் - 8

பயிற்சித்தாள் - 28

கவிதைப்பேழை - ஒன்றே குலம்




**********************   **********************-

1.மனிதர்கள் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும்ஒருவனே ஆவான்' - என்னும் பொருளை உணர்த்தும் பாடலடியைத் தெரிவு செய்க.

அ ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

ஆ) நன்றே நினைமின் நமனில்லை  நாணாமே

இ) சென்றேபுகும்கதி இல்லைநும் சித்தத்து

ஈ) நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே

விடை அ.) ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்


2. கீழ்க்காணும் பாடலடிகளில் அடிக்கோடிட்ட சொற்களின் பொருளை எழுதுக.

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே.

விடை : எமனைப் பற்றிய அச்சமில்லை.


3. சேர்த்தெழுதுக.

அ) பகவற்கு +ஒன்று = பகவற்கொன்று

ஆ) நம்பர்க்கு +அங்கு = நம்பர்க்கங்கு

இ) நம்பர்க்கு +ஒன்று = நம்பர்க்கொன்று

ஈ) பகவற்கு + அது   = பகவற்கது



4. பாடலில் அடிக்கோடிட்ட சொற்களைப் பிரித்தெழுதுக.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
விடை:
கோயில் -   கோ + இல்

ஈயில்  - ஈ + இல் 

5. சொற்களைத் தொடரில் அமைத்தெழுதுக,

அ) ஒன்றே குலம்

விடை: 'ஒன்றே குலம்' என்பது மனித இனத்தின் ஒற்றுமையைக் குறிக்கும்.

ஆ) ஒருவனே தேவன்

விடை: உலகைக் காக்கும் இறைவனை 'ஒருவனே தேவன் ' என்று
கூறி மகிழ்கிறோம்.

இ) நன்றே நினைமின் :

விடை: நன்றே நினைமின்' என்று திருமூலர் கூறுகிறார்.

ஈ) படமாடக் கோயில்

விடை: படமாடக் கோயிலில் வீற்றிருக்கும் இறைவனை வேண்டுவோம்.

உ) நடமாடக் கோயில்

விடை: நடமாடக் கோயில் என்று அடியார்களைத் திருமூலர் கூறுகிறார்

6.) பாடலடிகளில் பயின்று வந்துள்ள மோனை, எதுகை, இயைபுத் தொடை நயங்களை எடுத்தெழுதுக.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே.

விடை:

மோனை -    நன்றே, நமனில்லை,

 நினைமின், நின்றே, நிலைபேற

எதுகை - இன்றே, நன்றே, நின்றே,                                   சென்றே

இயைபு - தேவனும், நாணாமே.



7. கீழ்க்காணும் பாடலில் திருமூலரின் சொல்லாட்சித் திறனை விளக்குக (பக்.168)

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.

விடை:

படங்கள் அமைந்த மாடங்களை உடைய கோயிலில்  வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாகச்
செலுத்தினால், அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது.
அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில்
இருக்கும் இறைவனுக்கும் சேரும்.


8.) பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே.

வினாக்கள்

அ) 'நம்பர்' என்னும் சொல்லின் பொருளைக் கூறுக.

விடை: அடியார்

ஆ) 'நடமாடக் கோயில்' என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: அடியார்

இ) ஆமே - எதிர்ச்சொல் தருக.

விடை:

ஆமே  × சேராது.


9. படம் உணர்த்தும் கருத்தினை ஐந்துவரிக் கவிதையாக எழுதுக.
விடையைக் குறிப்பேட்டில் எழுதுக

மாணவச் செல்வங்களே ! இந்தப் படத்தைப் பார்த்துத் தங்களுக்கு என்ன தோணுகிறதோ அதை அப்படியே எழுதினால் போதும்.

10. நீ பிறருக்குச் செய்துள்ள உதவிகள் இரண்டனை எழுதுக.

விடை:  மாணவர்களே ! நீங்கள் தினமும் பலரைச் சந்தீப்பீர்கள். பேருந்தில் வயது முதிர்ந்தவர்க்கு இடம் கொடுத்திருப்பீர்கள். அடிகுழாயில் நீர் அடித்துக் கொடுத்திருக்கலாம். இப்படி என்னவெல்லாம் பிறருக்குச் செய்தீர்களோ , அதை அப்படியே நீங்கள் எழுதலாம்.

***********************    ********************

மேலே கண்ட வினா & விடைகளை காட்சிப் பதிவில் விளக்கமாகக் காணலாம்.









*************************    ******************

வாழ்த்துகள் நண்பர்களே !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

************************   ********************



GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் உரைத்தொடர்.


GREENTAMIL.IN - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     *******************

Post a Comment

0 Comments