எட்டாம் வகுப்பு - தமிழ்
பயிற்சித்தாள் - 26 - இயல் 7
கற்கண்டு - வல்லினம் மிகும் இடங்களும் , மிகா இடங்களும்.
1. சேர்த்து எழுதுக.
அ) கோயில்+ஐ + கட்டினான்
- கோயிலைக் கட்டினான்
ஆ) மோர் + ஐ + குடித்தான் - மோரைக் குடித்தான்
இ) பள்ளி + கு + சென்றேன் - பள்ளிக்குச் சென்றேன்.
ஈ) மதி+ கு + கொடுத்தேன் - மதிக்குக் கொடுத்தேன்.
2. பொருத்துக.
வ.எண் சொல் இலக்கணக் குறிப்பு
அ ) சுடுசோறு வினைத்தொகை
ஆ ) எழுதிய கவிதை - பெயரெச்சம்
இ ) தாய்தந்தை - உம்மைத்தொகை
ஈ ) எழுதாத பாடல் - எதிர்மறைப் பெயரெச்சம்
3. கீழ்க்காணும் தொடர்களில் வல்லின மெய்யிட்டும் நீக்கியும் எழுதுக. (பக். 162)
அ) என் கண்களை திறந்தத் தாயே.
விடை: என் கண்களைத் திறந்த தாயே.
ஆ) அந்த கரும்பைவிட இனிக்கிறதுத் தங்கள் பேச்சு.
விடை : அந்தக் கரும்பைவிட இனிக்கிறது தங்கள் பேச்சு
இ) இந்த கனியை சுவைத்து பாருங்கள்.
விடை - இந்தக் கனியைச் சுவைத்துப் பாருங்கள்
4, எண்ணுப்பெயர்களில் வல்லினம் மிகும் இடங்களை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
விடை - எட்டுப் புத்தகம் , பத்துக்காசு
************************ ****************
மாணவர்களே ! பயிற்சித்தாள் 26 வினா & விடைகளைக் காட்சிப்பதிவாக விரிவான விளக்கத்துடன் கண்டு மகிழுங்கள்.
********************* *********************
5. கீழ்க்காணும் சொற்றொடர்களில் வல்லின மெய்யிட்டும் இடாமலும் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மாற்றத்தை எழுதுக.
அ) தந்த பெட்டி - கொடுத்த பெட்டி
விடை: தந்தப்பெட்டி - தந்தங்களை உடைய பெட்டி.
ஆ) நாடி துடித்தது - உட நாடி துடித்தது
விடை: நாடித்துடித்தது - விரும்பித் துடித்தது
6, எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது எனில் கீழ்க்காணும் சொற்களில் ஏன் வல்லினம் மிகுந்தது எனக் கூறுக.
அ) எழிலனைக் கண்டேன்.
வேற்றுமை உருபுகள் வந்தமையால்.
ஆ) அகிலனுக்குக் கொடுத்தேன் -
இரண்டாம் வேற்றுமை உருபு , நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம் மிகும்.
எழுவாய்ச் சொற்கள் -
தம்பி படித்தான், யானை பிளிறியது
வல்லினம் மிகவில்லை.
7. கீழ்க்காணும் சொற்றொடர்களில் வல்லினம் மிகுந்ததற்கான காரணத்தை எழுதுக,
தாய்த்தமிழ், தமிழ்த்தாய்
விடை: தாய்த் தமிழ் - உவமைத் தொகை- வல்லினம் மிகும்
எ.கா) மலர்ப்பாதம்
தமிழ்த்தாய் - உருவகம் - வல்லினம் மிகும். வாய்ப்பவளம்
8 .தேவையான இடங்களில் வல்லின மெய்யிட்டு எழுதுக.
கிழக்கு திசையில் கதிரவன் கண்விழித்ததையும் அறியாமல்
உறங்கிக்கொண்டிருந்தான் அழகன். அவன் கனவில், மரபெட்டியிலிருக்கும்
விளையாட்டு பொம்மை வந்து வந்து சென்றது. அதனை கை நீட்டி எடுக்க எழுந்த அழகன் கட்டிலிலிருந்து கீழே விழுந்தான்.
விடை:
கிழக்குத் திசையில் கதிரவன் கண்விழித்ததையும் அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான் அழகன். அவன் கனவில், மரப்பெட்டியிலிருக்கும் விளையாட்டுப் பொம்மை வந்துவந்து சென்றது. அதனைக் கைநீட்டி எடுக்க எழுந்த அடிகன் கட்டிலிலிருந்து கீழே விழுந்தான்
9. கீழ்க்காணும் உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
இராஜராஜன் தஞ்சையில் கோயில் கட்டினான். அது தஞ்சை பெருவுடையார்
கோயில் என்று வழங்கப்படுகிறது. அக்கோயிலில் சோழர்காலக் கட்டடக் கலையின் புதுவித அமைப்பாகச் சதுரப்போதிகைகள் கொண்ட பன்முகத் தூண்கள் காணப்படுகின்றன.
அ) கோயில் கட்டினான்-ஏன் வல்லினம் மிகவில்லை?
விடை: இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடத்தில் மிகாது.
ஆ) அது தஞ்சை - ஏன் வல்லினம் மிகவில்லை?
விடை: அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
இ) சதுரப்போதிகை - ஏன் வல்லினம் மிகுந்துள்ளது?
சதுரம் +பொதிகை
விடை: மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால்
அந்த மகரமெய் அழிந்து, அவ்விடத்தில் வல்லினம் மிகும்
10. கீழ்க்காணும் உரைப்பகுதியில் வல்லினம் மிகுந்துள்ள சொற்கள் ஐந்தனை எடுத்தெழுதிக் காரணத்தைக் கூறுக,
அதியமான்: காட்டுவளத்தைக் கண்டு மகிழ்ந்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன.
அதனால்தான் இன்று நம் அமைச்சரோடும் வீரர்கள் சிலரோடும் காட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே இந்தக் கனியைப் பறித்தேன். இதைச் சாப்பிட்டுப்பார்த்துச் சுவை எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் தாயே.
விடை:
வளத்தைக் கண்டு ,
கனியைப் பறித்தேன் . இரண்டாம் வேற்றிமை உருபு வெளிப்படையாக வந்ததால்.
காட்டுக்குச் - நான்காம் வேற்றுமை உருபு
சாப்பிட்டுப் பார்த்து - வன்தொடர் குற்றியலுகரம்
*********************** *********************
வாழ்த்துகள் நண்பர்களே !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
0 Comments