எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 6
பயிற்சித்தாள் - 23 - மதிப்பீடு
********************** *******************
1. மூவேந்தர் குறித்த செய்தி இடம்பெறாத நூலைத் தேர்ந்தெடுக்க.
அ) மகாபாரதம்
ஆ) ஆசியஜோதி
இ) வால்மீகி இராமாயணம்
ஈ) அர்த்தசாத்திரம்
விடை ஆ ) ஆசியஜோதி
2. சரியானதைத் தேர்தெடுத்து எழுதுக.
மண் + அளவு = மண்ணளவு என்பது,
அ )உயிரீற்றுப்புணர்ச்சி
ஆ) மெய்யீற்றுப்புணர்ச்சி
இ) மெய்முதல் புணர்ச்சி
ஈ) இயல்பு புணர்ச்சி
விடை அ) உயிரீற்றுப் புணர்ச்சி
3. கீழ்க்காணும் சொற்களைக்கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக.
(சேரநாடு , கப்பற்படை, முசிறி, உள்நாட்டு வணிகம், தத்தம்)
கடல்வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. சேரர்கள் வலிமை மிகுந்த கப்பற்படை - வைத்திருந்தனர். முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகமாக விளங்கியது. சேரநாட்டில் உள்நாட்டு வணிகம் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர்.
4. கீழ்க்காணும் சொற்களைக்கொண்டு தொடர் அமைக்க.
அ) மூவேந்தர் : பண்டைய தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்டனர்.
ஆ) திரைகடல்
திரைகடல் ஓடி திரவியம் தேட வேண்டும்.
இ) தேயிலைத் தோட்டம்
நீலகிரி, தேயிலைத் தோட்டம் நிறைந்த மாவட்டம் ஆகும்.
5. பொருத்துக.
வ.எண் சொல் விடை
அ ) முருங்கைச்செடி - தோன்றல் விகாரம்
ஆ ) கொல்லிமலை - இயல்பு புணர்ச்சி
இ ) கடற்போர் - திரிதல் விகாரம்
ஈ ) பண்டமாற்று - கெடுதல் விகாரம்
6. கீழ்க்காணும் சொற்களிலுள்ள இயல்புபுணர்ச்சிச் சொற்களை எடுத்தெழுதுக.
கலையழகு, பழனிமலை, பூச்செடி, பொன்மாடம் , பின்னலாடை, கொடிமரம், பந்தாட்டம், காய்கறி
விடை:
1. பழனி மலை 2. பொன் மாடம்
3 .கொடிமரம் 4. காய்கறி
7, உரைப்பகுதியில் அமைந்துள்ள வினைமுற்றுகளை எடுத்தெழுதுக.
தென்னந்தோப்பில் தென்றல் வீசியது. மகிழ்ந்த காளைக்கன்று துள்ளி விளையாடியது. மாமரக் கிளையில் அமர்ந்து குயில்கூவியது. அதைக் கேட்ட மயில் அகவியது, காகம் கரைந்தது.
விடை: 1. வீசியது 2. விளையாடியது
3. கூவியது 4. அகவியது 5. கரைந்தது.
8. கீழ்க்காணும் தொடர்களை மாற்றுக,
அ) ஆ! இராமு கீழே விழுந்து விட்டானே! (செய்தித் தொடராக்குக)
விடை: இராமு கீழே விழுந்விட்டான்.
ஆ) கயல்விழி சென்னை சென்றாள். (வினாத் தொடராக்குக)
விடை: கயல்விழி எங்கு சென்றாள்?
இ) மனிதநேயம் வளரட்டும். (விழைவுத்தொடராக்குக)
விடை: மனித நேயம் வளருங்கள்.
9 ) ' கற்பாறை ' - இச்சொல்லைப் பிரித்துப் புணர்ச்சியை விளக்குக.
விடை - கல் + பாறை = கற்பாறை - திரிதல் புணர்ச்சி. காரணம் ல் என்ற எழுத்து ற் ஆக மாறியுள்ளது.
********************** ********************
வணக்கம் நண்பர்களே ! மேலே உள்ள பயிற்சித்தாள் வினாக்களை எளிய விளக்கத்துடன் நேரடிக் காட்சிப் பதிவாக கீழே உள்ள காணொலியில கண்டு மகிழலாம்.
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் உரைத்தொடர்.
GREENTAMIL.IN - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
அழைத்து மகிழ - 97861 41410
0 Comments