ஜூன் 21 , உலக யோகா தினம் - தினமும் நாம் எளிமையாகச் செய்யும் யோகா - உடல் , மனம் வலுப்பெற உதவும் யோகப்பயிற்சிகள்.

 

ஜூன் 21 - உலக யோகா தினம்.

சிறப்புப் பதிவு 

வழங்குபவர் - திருமதி.இலட்சுமி ப்ரதிபா அவர்கள் , யோகா பயிற்றுநர், மதுரை.

*****************    ***********************



**********************   *******************

உடல் நலம் , மன நலம் தரும் யோகா.

        அன்பான வணக்கம். யோகக்கலை 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு கலை ஆகும். ரிக் வேதம் உருவாகிய காலத்தில் ரிஷிகள் , முனிவர்கள் , சன்யாசிகள் போன்றோர் தாங்கள் புரிந்த தவங்கள் , உடற்பயிற்சிகள் , அதனால் அவர்கள் பெற்ற வலிமை, மன உறுதி, இறையாண்மை போன்றவை மற்றும் அவர்கள் உணர்ந்த உண்மைகள் போன்றவற்றை பதிவு செய்து வைத்தனர். 

உலகின் தத்துவக் கல்விக்கான முதல் ஆறு பாடசாலைகளிலும் யோகக்கலை பயிற்றுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கௌதம புத்தர் காலத்தில் தியானநிலைகள் வலுப்பெற்று வெளிக்கொணரப்பட்டன.

        யோகாசனம் பற்றிய சொற்கள் பல புதிராகத் தோன்றக் காரணம் நம் மொழி போன்று பழமையான நம் இந்திய மொழியான சமஸ்கிருத மொழியில் உருவானதே ! யோகக்கலையில் 500 க்கும் மேற்பட்ட ஆசனங்கள் இருப்பினும், நாம் அன்றாடம் சிலவற்றை தொடர்ந்து செய்தாலே போதுமானதாகும்.

 பொதுவாக அமர்ந்தநிலை ஆசனங்கள் சில வஜ்ராசனம் , பத்மாசனம் , பட்சிமோட்சாசனம், தண்டாசனம் போன்றவை... நின்ற நிலை ஆசனங்களில் விருட்சாசனம், உச்சாசனம், தாலாசனம் , த்ரிகோணமுக்தாசனம் போன்றவையும், படுத்தநிலை ஆசனங்களில் கோப்ரா போஸ், சிசுஹாசனா, விபுரிதகாசனா, சவாசனா போன்றவை போதுமானது. இவற்றைச்  செய்திட பத்து முதல் பதினைந்து நிமிடங்களே போதுமானது.




 யோகாசனங்களுக்கு முன்னால் சிறிய நடைப்பயிற்சி, வார்ம் அப் எனப்படும் ஆயத்தப் பயிற்சிகளை பத்து நிமிடங்கள் செய்துவிட்டு துவங்கலாம். 

                   யோகாசனம் முடிந்த பிறகு பிராணாயாமம் எனப்படும் சுவாசப்பயிற்சி செய்வது அவசியம். இவற்றைச் செய்வதனால், நம்உடலில் சுவாசம் சீராகும், உடல் நலம் மேம்படும், தசை சதை சிறப்பாக இயங்கும், நரம்புகள் சார்ந்த பிரச்சனைகள் தீரும். குருதியோட்டம் சீராகும். இருதய நோய் வராமல் தடுக்கலாம். அனைத்திற்கும் மேலாக மனம் ஒருநிலைப்படும், மகிழ்ச்சி மேலோங்கும். 




       உலகில் 19 வகையான யோகக்கலை உள்ளது... 66 அடிப்படை யோகப்பயிற்சிகளும் உள்ளன. மந்திரங்கள் உச்சரிக்கும் பழக்கம் இந்தியர்களுக்கு உண்டு. மன் _ மனம் / த்ரா _ சிந்திப்பதில் இருந்து விடுதலை.. பற்றருத்தல் எனும் நிலை... தம்மை தாமே உணர்ந்திட உலக விசயங்களை மறந்து மனதை ஒருநிலைப்படுத்த உதவுபவை மந்திரங்கள்.  

      உடல் மனம் ஆன்மா எனப் படிப்படியாக உணர்த்தவல்லது யோகக்கலை. உண்மை, எதார்த்தம் ,ஒளி, தெய்வீகம், அமைதி , அன்பு இவை உணர யோகா பயில்வது அவசியம். சுவாமி விவேகானந்தர் 1883 யோகக்கலையை உலகம் முழுவதும் பரவச்செய்தார். 1918 ல் யோகக்கலையின் தந்தை என அழைக்கப்படும் யோகேந்திரர் , ஹத யோகம் என அனைவருக்கும் கற்பிக்கலானார். இன்று யோகக்கலை பயிலும் முன் நல்ல குருவிடம் கற்று, கற்றபின் அதனை நம் வாழ்க்கை முறைக்கு ஏற்பச் செய்து நலமாக வாழ வேண்டும்.




          எவர் பின்னும் அறியாமல் சென்று குடும்பத்தை எவரும் இழக்க கூடாது. இன்று பள்ளிகளிலேயே மேற்கூறிய எளிமையான பயிற்சிகளை கற்பிக்கிறார்கள்... இவற்றைச் செய்தாலே வாழ்க்கை முழுமைக்கும் போதுமாதாகும்.  ஆழ்ந்த யோக அற்புதங்கள்  பலவும் உள்ளன. நாம் தொடர்ந்து தியானங்கள் செய்தால் நம் உடலில் ஏழு சக்கரங்களும் சீராக இயங்கத் துவங்கும்.இறையாற்றலை உணரலாம்.  இவை நமக்கு ஆரோக்கியமான நற்சிந்தனைகளுடன் கூடிய அற்புத வாழ்வியலைத் தரும்... இனிமையான யோகா தின வாழ்த்துகள் . நன்றி..

நன்றி : திருமதி.இலட்சுமி ப்ரதிபா , யோகா பயிற்றுநர் ,மதுரை.


***********************   *****************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     ******************

Post a Comment

0 Comments