ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 20
பசுமை , குளுமை , வளமை = மரம்
மரம் அழகாக வரைவது எப்படி ?
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
************** ************* ************
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! இன்று மிக மிக மகிழ்வான நாள் . ஆம் ! இன்றுடன் நீங்கள் 20 ஓவியம் வரையக் கற்றுக் கொண்டு விட்டீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஓவியம் ரொம்ப ரொம்பப் பிடித்தமானதா இருந்திருக்கும். அந்த வகையில இதுவரை நாம் வரையக் கற்றுக் கொண்ட இருபது ஓவியங்களில் எனக்கு மிக மிக பிடித்தமான ஓவியம் இன்று வரைய இருக்கிற மரம்தான்.
எல்லா ஓவியங்களும் மிகச்சிறப்பானவை. என்றாலும் தங்கப் பதக்கத்தில் ஒரு முத்துப் பதித்ததைப் போல முத்தாய்ப்பான ஓவியமா இந்த ஓவியத்தை நான் கருதுகிறேன்
மரங்களைப் பற்றித் தொடர்ந்து பேசியும் , எழுதியும் , பாடலாகவும் பாடி விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறோம், மாற்றம் என்பது நம்மில் இருந்தே தொடங்க வேண்டும். அது தொடர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அந்த வகையில நீங்க எல்லாருமே உங்க பிறந்த நாளைக்கு உங்க வீட்லயோ , பள்ளியிலயோ ஒரே ஒரு மரம் நட்டு வளருங்கள். மரம் வளர நீங்கள் வளர்வீர்கள். நீங்கள் வளர மரம் வளரும். பண்டைத் தமிழர்கள் மரத்தை மன்னராக , சகோதரியாக நினைத்து வாழ்ந்து வந்ததை நாம் இலக்கியத்திலே , திரைப்படத்திலே காண்கிறோம்.
கோடை வெயிலின் வெம்மையைத் தணிக்க , ஏரிக்காடு , கொடைக்கானல் , ஊட்டி என நாம் செல்கிறோம். கொஞ்சம் நாம் முயற்சி செய்தால் நாம் இருக்கும் ஊரையே குளு குளு மலைப்பிரதேசமாக மாற்ற நம்மால் முடியும்.
சரி . இப்போ மரம் எப்படி வரையறதுனு பார்ப்போம். அதன்பின் மரம் நடுவோம் என மழலைக் குரலில் பாடலையும் காண்போம்.
படம் : 1
படம் : 2
படம் : 3
பசுமையான , குளு குளு மரம் இதோ !
************** ************** *************
செல்லக் குழந்தைகளே ! இப்போ மழலைக் குரலில் பாடலைக் கண்டு கேட்டு மகிழ்வோமா ?
பாடல் : மு.மகேந்திர பாபு
பாடகி : ம.சஹானா
இசை : தினேஷ் பாபு.
*************** **************** *********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments