ஆறாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - பயிற்சித்தாள் - 7 விரிவானம் - கிழவனும் கடலும் / 6 TAMIL - WORKSHEET 7 - QUESTION & ANSWER

 

ஆறாம் வகுப்பு - தமிழ்

இயல் - 2

பயிற்சித்தாள் - 7

விரிவானம் - கிழவனும் கடலும்



*************   **************    *************


1 ) கொடுக்கப்பட்டுள்ள பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

       "வா! வா! மீனே! தூண்டில் முள்ளில் உனக்காகச் சூரைமீனை மாட்டி  வைத்திருக்கிறேன் சாப்பிடு,    சாப்பிடு...அப்போதுதானே நீ என்னிடம் மாட்டுவாய் வா! வா! அப்படித்தான்.. வா!"

விடை: வா வா

சாப்பிடு, சாப்பிடு

2. கீழ்க்காணும் பத்தியைப் படித்து அதில் காணும் பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களை அட்டவணையில் நிரப்புக.

                      இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்தக்கதை. இக்கதையின் நாயகன் சாண்டியாகோ. வயது முதிர்ந்த மீனவர். முன்பெல்லாம் கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்ப மாட்டார். ஆனால் கடந்த எண்பத்து நான்கு நாள்களாக ஏனோ அவருக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை. மனோலின்என்னும் சிறுவன் மீன் பிடிக்கக் கற்றுக் கொள்வதற்காக முதல் நாற்பது நாள்களும் அவருடன் கடலுக்கு வந்தான். அவன், அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு பேச்சுத் துணையாகவும் இருந்தான். அவரோடு கடலுக்குப் போனால் ஒரு மீனும் கிடைப்பதில்லை என்று அவனை வேறு படகிற்கு அனுப்பிவிட்டனர் அவனது பெற்றோர். இப்போதெல்லாம் தனியாகவே மீன் பிடிக்கச் செல்கிறார் சாண்டியாகோ.

பெயர்ச்சொல்               -   வினைச்சொல்

நாயகன்                           -   வந்தான்

சாண்டியாகோ               -  இருந்தான்

மனோலின்                      -  செல்கிறார்

பெற்றோர்                        - கற்றுக்கொள்ள

                                                  அனுப்பிட்டனர்.

3. குறிப்புகளைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

               "கிழவனும் கடலும் (The oldman and the sea) என்னும் ஆங்கிலப் புதினம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு படக்கதையாக இங்கு சுருக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூல் 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றது. இந்நூலின் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே".

வினாக்கள்

அ) 'கிழவனும் கடலும்' என்னும் கதைப்பகுதி எம்மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது?

விடை: ஆங்கி. மொழியிலிருந்து மொழிபெயர்க்கப் பட்டது.

ஆ) 'கிழவனும் கடலும் ' என்னும் புதினத்தின் ஆசிரியர் யார்?

விடை: எர்னெஸ்ட் ஹெமிங்வே

4. கீழ்க்காணும் கூற்றைக் கூறுகின்றகதாபாத்திரம் யார்?

"மீனே! ஏன் இப்படி தூண்டிலை இழுக்கிறாய்? என்னையும் கடலுக்குள் இழுத்துத் தள்ளிவிடப் பார்க்கிறாயா?"

விடை:  சாண்டியாகோ

5. உனக்குத் தெரிந்த, கேட்டறிந்த மீன்களின் பெயர்களைப் பட்டியலிடுக.

விடை:

கெண்டை மீன்

கெழுத்தி மீன்

அயிரை மீன்

வாளை மீன்

விலாங்கு மீன்

6. நீ சாண்டியாகோவாக இருந்தால் மீன் கிடைக்காத நேரத்தில் என்ன செய்திருப்பாய்?

விடை: தொடர்ந்து முயற்சி    செய்து            கொண்டிருப்பேன்.


7.சாண்டியாகோவைப் போன்று மீன்பிடித்த அனுபவம்  உண்டா? அல்லது மீன் பிடித்ததைப் பார்த்ததுண்டா? நண்பரிடம் பேசுவதுபோன்று உரையாடல்ஒன்றனை எழுதுக.

விடை: மாணவர்களே ! உங்கள் மனதில் தோன்றும் செய்திகளை உரையாடலாக எழுதுங்கள் 

8. சாண்டியாகோவின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றைப் பற்றி ஐந்து

நிமிடங்கள் பேசுவதற்கேற்ற உரை ஒன்றனை உன் சொந்த நடையில் எழுதுக.

விடை:  மாணவர்களே ! உங்கள் மனதில் தோன்றும் தன்னம்பிக்கை , விடாமுயற்சி பற்றிய செய்திகளைத் தொகுத்து  எழுதுங்கள்.

***************    ***************    ***********

மேலே உள்ள வினாக்களின் விடையை இனிய .எளிய விளக்கத்துடன் காட்சிப் பதிவாகக் கண்டு மகிழுங்கள்.



**********    *************   ***************


வாழ்த்துகள் நண்பர்களே ! 
பார்த்ததற்கும் , பகிர்ந்ததற்கும் நன்றி !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

உங்கள் வாட்சாப் குழுவில் 97861 41410 என்ற எண்ணை இணைத்து அனைவரும் பயன்பெறச்செய்யலாம் ஆசிரிய நண்பர்களே !

**********************    *********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* ***************

Post a Comment

0 Comments