ஆறாம் வகுப்பு - தமிழ்
இயல் - 2
பயிற்சித்தாள் - 6
கவிதைப்பேழை - காணி நிலம்
************* *************** ************
1 ) காணி நிலம் வேண்டும்' என்னும் தொடரில், 'காணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைப் பின்வரும் தொடர்களிலிருந்து எடுத்தெழுதுக.
அ) நிலத்தின் வகையைக் குறிக்கும் சொல்
ஆ) நிலத்தின் பெயரைக் குறிக்கும் சொல்
இ) நில அளவைக் குறிக்கும் சொல்
ஈ ) நிலத்தைக் குறிக்கும் சொல்
விடை: இ ) நில அளவைக் குறிக்கும் சொல்
2. 'காணி நிலம் வேண்டும்' எனப் பாரதியார் யாரிடம் வேண்டுகிறார் என்பதற்குச் சரியான விடையை எடுத்தெழுதுக.
அ) பராசக்தி
ஆ) இலட்சுமி
இ) சரஸ்வதி
ஈ ) காளி
விடை: அ. பராசக்தி
3. பொருத்துக.
விடை
அ) மாளிகை - கட்டித்தர வேண்டும்
ஆ) தென்னை மரம் - பக்கத்திலே வேண்டும்
இ) கத்தும் குயிலோசை - காதில்பட வேண்டும்
ஈ ) சித்தம் மகிழ்ந்திடவே - இளம் தென்றல் வர வேண்டும்
4. சரியான விடையத் தெரிவுசெய்க.
பாரதியார். தன் வீட்டருகே எத்தனை தென்னை மரங்கள் வேண்டுமென்றார்?
அ) எட்டு. பத்து
ஆ) பத்து, பன்னிரண்டு
இ ) பன்னிரண்டு , பதினாறு
ஈ) பதினாறு, பதினெட்டு
விடை: ஆ. பத்து, பன்னிரண்டு
5. 'குயிலோசை' என்னும் சொல்லின் பிரிக்கப்பட்ட வடிவத்தைத் தெரிவுசெய்க.
அ) குயி+லோசை
ஆ) குயிலோ +சை
(இ) குயில் + ஓசை
ஈ ) கு+யிலோசை
விடை: இ ) குயில் +ஒசை
மேலே உள்ள வினாக்களின் விடைகளை இனிமையான விளக்கத்துடன் கீழே உள்ள காட்சிப் பதிவில் கண்டு மகிழலாம்.
************** ************* ***********
********************** *********************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments