பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் 2 - இயற்கை - கற்கண்டு
தொகைநிலைத் தொடர்கள்
உவமைத் தொகை , உம்மைத்தொகை ,
அன்மொழித்தொகை
*************** *************** ***********
வணக்கம் மாணவ நண்பர்களே ! நாம் தொகைநிலைத் தொடர்கள் வரிசையில் நேற்று வினைத்தொகை மற்றும் பண்புத்தொகை பற்றி விரிவாகக் கண்டோம். இன்று உவமைத்தொகை , உம்மைத்தொகை மற்றும் அன்மொழித்தொகை பற்றி எழுத்து வடிவிலும் பெரும்புலவர் சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தையும் இன்று காண்போம்.
உவமைத்தொகை
உவமைக்கும் பொருளுக்கும் ( உவமேயம் ) இடையில் உவம உருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
எ.கா.
மலர்க்கை (மலர் போன்ற கை)
மலர் - உவமை, கை - உவமேயம் ( பொருள் )
இடையே 'போன்ற' என்னும் உவம
உருபு மறைந்து வந்துள்ளது.
நண்பர்களே ! உவமைத்தொகை & அன்மொழி்த்தொகைக்கான விளக்கத்தைக் காட்சிப் பதிவில் காண்போம் !
உம்மைத்தொகை
இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும். உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல் , நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.
அண்ணன் தம்பி, தாய்சேய்
அண்ணனும் தம்பியும், தாயும் சேயும் என
விரிந்து பொருளை உணர்த்துகின்றன.
உம்மைத் தொகைக்கான இனிய , எளிய விளக்கத்தைக் காட்சிப் பதிவில் கண்டு மகிழ்வோம்.
அன்மொழித்தொகை
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை ஆகும்.
எடுத்துக்காட்டு.
சிவப்புச் சட்டை பேசினார்
முறுக்கு மீசை வந்தார்
இவற்றில் சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார், முறுக்கு மீசையை உடையவர் வந்தார் எனத் தொகைநிலைத்தொடர் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருகின்றன.
நண்பர்களே ! இப்போது இயல் இரண்டில் கற்கண்டு தலைப்பில் அமைந்த தொகைநிலைத் தொடர்கள் பகுதியில் அமைந்த ,
1 ) வேற்றுமைத்தொகை
2 ) வினைத்தொகை
3 ) பண்புத்தொகை
4 ) உவமைத்தொகை
5 ) உம்மைத்தொகை
6 ) அன்மொழித்தொகை
ஆகியவற்றை எழுத்து வடிவத்திலும் , நம்முடைய பெரும்புலவர். திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்திலும் கண்டு மகிழ்ந்தோம். பாருங்கள் . கருத்துகளைக் கூறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.
************* ************* *************
********************** *********************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
1 Comments
Hi
ReplyDelete