பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - மொழியோடு விளையாடு - பாடப்பகுதி வினாக்களும் , விடைகளும் .

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

இயல்  - 1

அமுத ஊற்று - மொழி

மொழியோடு விளையாடு 

பாடப்பகுதி வினாக்களும் , விடைகளும் ***********************   *******************


மொழியோடு விளையாடு

சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

( தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ ) 

எ.கா. பூமணி

விடை:

(i) தேன்மழை

(ii) மணிமேகலை

(iii) பொன் விலங்கு

(iv) வான்மழை

(v) செய்விளக்கு

( vi ) செய்வான்

( vii) பூமழை

(viii) பொன்மணி

*********************  *********************

வினாத்தொடர்கள் அமைக்க

குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க.

குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்

எ.கா. குறளின்பத்தில் திளைக்காத தமிழன் உண்டா?

1 ) சுவைக்காத இளநீர்

சுவைக்காத இளநீர் ஏதாவது உண்டா?

2.) காப்பியச் சுவை.

காப்பியச்சுவை இல்லாத தமிழ் காப்பியமா?

3 ) மனிதகுல மேன்மை

மனிதகுல மேன்மையைப் போற்றாத இலக்கியம் தமிழில் உண்டா?

4 ) விடுமுறைநாள்

விடுமுறைநாளில் விளையாடாத மாணவர்கள் உண்டா?

*********************    *********************

எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக

செய்யுள் அடி             எண்ணுப்பெயர்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை.

நான்கு - ச

எறும்புந்தன் கையால் எண்சாண்

எட்டு  -  அ

ஐந்துசால்பு ஊன்றிய தூண்

ஐந்து - ரு

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

நாலும் இரண்டும்

ச உ

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மானவனுக்கு வகுப்பது பரணி

ஆயிரம்- 

***********************    *******************

அகராதியில் காண்க

1.அடவி   - காடு

2. அவல் -  நெல் இடியல்

3 . சுவல் -  மேடு

4 . செறு  - சிறு வயல்

5 .பழனம் - வயல் 

6. புறவு      - காடு

**********************   ********************

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

வாழ்க்கை எனும்

பூட்டைத் திறக்கும் 

திறவுகோல் புத்தகம்.

புத்தகம் எடுத்தவரும்

புத்துணர்வோடு படித்தவரும்

வாடியதில்லை வாழ்க்கையில்.

படிக்கப் படிக்க 

அறியாமை இருளை அகற்றும்

ஆனந்த ஒளி பரப்பும்.

வளம்பெற நலம்பெற

புத்தகம் படி.

மு.மகேந்திர பாபு.

**********************  *******************

செயல் திட்டம்

1 ) நீங்கள் வாழும் பகுதியிலுள்ள எவையேனும் ஐந்து பயிர்வகைச் சொற்களுக்கான படத்தொகுப்பை   உருவாக்குக.


(i) பச்சைப் பயிறு

(ii) காராமணி

(iii) உளுந்து

(iv) கம்பு

(v) சோளம்

*********************    *********************

நிற்க அதற்குத் தக


இன்சொல் வழி

பிறர் மனம் மகிழும்

அறம் வளரும்

புகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் சேருவர்

அன்பு நிறையும்

தீய சொல் வழி

பிறர் மனம் வாடும்

அறம் தேயும்

இகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் விலகுவர்

பகைமை நிறையும்

இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?

விடை : இன்சொல் வழி. என் நண்பருக்குக் காட்டும் வழி இன்சொல் வழி.

***********************    *******************

கலைச்சொல் அறிவோம்

1. Vowell  -   உயிரெழுத்து

 2. Monolingual -  ஒரு மொழி

3 . Consonant     -  மெய்யெழுத்து

4 . Conversation -  உரையாடல்

5. Homograph  -  ஒப்பெழுத்து

6. Discussion  - கலந்துரையாடல்

*********************   *********************

அறிவை விரிவு செய்

1. நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் - 

முனைவர் சேதுமணி மணியன்

2 . தவறின்றித் தமிழ் எழுதுவோம் - மா.நன்னன்

3 . பச்சை நிழல் - உதயசங்கர்

**********************   *********************


வாழ்த்துகள் மாணவர்களே ! பாருங்கள் , கருத்துகளைக் கூறுங்கள் ! நண்பர்களுக்கும் பகிருங்கள் ! 

மு.மகேந்திர பாபு ,தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410 

************************  ********************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     *******************

Post a Comment

2 Comments

  1. அவல்- பள்ளம் என்று சொல்லலாமா sir

    ReplyDelete