பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - இலக்கணம் - சொல் - தொழிற்பெயர் & வினையாலணையும் பெயர் - காட்சிப்பதிவு விளக்கம்.

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

இயல்  - 1  - மொழி

கற்கண்டு - சொல்

தொழிற்பெயர் 

*************************   ****************

வணக்கம் மாணவ நண்பர்களே ! 

          நாம் நேற்றைய வகுப்பில் ' சொல் ' என்ற தலைப்பின் கீழ் மூவகை மொழி அதாவது , தனிமொழி , தொடர்மொழி , பொதுமொழி என்பனவற்றைப் பற்றிய செய்திகளையும் , நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் விளக்கிய காட்சிப் பதிவையும் கண்டோம்.  இன்று நாம் தொழிற்பெயர் பற்றிய செய்திகளைக் காண்போம்.தொழிற்பெயர்


             ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண் , இடம்,  காலம் ,பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.

எ. கா.

ஈதல், நடத்தல்

விகுதி பெற்ற தொழிற் பெயர்கள்

        வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற் பெயர் ஆகும்.

வினையடி  விகுதி    தொழிற்பெயர்

நட                   தல்              நடத்தல்

 வாழ்               கை           வாழ்க்கை

ஆள்               அல்             ஆளல்


ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்.

எ. கா.

நட என்பது வினையடி

நடை, நடத்தை, நடத்தல்


எதிர்மறைத் தொழிற்பெயர்

                    எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறைத் தொழிற்பெயர் ஆகும்.

எ. கா.

நடவாமை, கொல்லாமை

முதனிலைத் தொழிற்பெயர்

        விகுதி பெறாமல் வினைப் பகுதியே  தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற்பெயராகும்.

எ. கா.

தட்டு, உரை, அடி

     இச்சொற்கள் முறையே   தட்டுதல், உரைத்தல், அடித்தல் என்று பொருள்படும் போது  முதனிலைத்தொழிற் பெயர்களாகின்றன.

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

      இவை விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர்களாகும்.

எ. கா.


தொ.பெ./   மு.தொ.பெ. / மு.தி.தொ.பெ.

கெடுதல்       கெடு              கேடு

சுடுதல்           சூடு                 சுடு


வினையாலணையும் பெயர்

ஒரு வினைமுற்று பெயரின்   தன்மையை  அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது  வினையாலணையும் பெயர் எனப்படும். அது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்.

எ. கா.

வந்தவர் அவர்தான்.

பொறுத்தார் பூமியாள்வார்.


தொழிற்பெயர்க்கும்வினையாலணையும்பெயர்க்கும் உள்ள வேறுபாடு

தொழிற்பெயர் 

வினை,பெயர்த் தன்மையாகி தொழிலைச்செய்யும் வினையையே   உணர்த்தி நிற்கும்.

காலம் காட்டாது

படர்க்கைக்கே உரியது

எ.கா. பாடுதல், படித்தல்


வினையாலணையும் பெயர்


தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும்

காலம் காட்டும்

 மூவிடத்திற்கும் உரியது

எ. கா.

பாடியவள், படித்தவர்


மாணவர்களே ! இப்போது நாம் கண்ட தொழிற்பெயர் பற்றிய செய்திகளை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்களின் அருமையான காட்சிப் பதிவில் காண்போமா ? மாணவர்களே !  நாம் இயல் 1 ல் அனைத்துப் பகுதிகளையும் விரிவாகப் பார்த்துள்ளோம். அடுத்த வகுப்பில் பாடப்பகுதியில் அமைந்துள்ள வினாக்களுக்கான விடைகளைக் காண்போம். மகிழ்ச்சி. வாழ்த்துகள் .

பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். தங்களின் கருத்தினைக் கூறுங்கள். நன்றி.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410

**********************   ********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் 

உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     *****************


Post a Comment

0 Comments