ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதி - 17 . பன்றி அழகாக வரைவது எப்படி ? - குழத்தைகளின் ஓவியத் திறமையை ஊக்குவிக்கும் தொடர்.

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 16

பன்றி அழகாக வரைவது எப்படி ?

வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.


    குட்டிக் குழந்தைகளே வணக்கம். நலமா ? இன்று நாம் வரையப் போகும் நபர் யாரு ? ஆமா !  அவர்தான் பன்றியார்.  

என்னது ? என்னைச் சொல்லி உங்களத் திட்றாங்களா ? அடடா ! அது தப்பாச்சே ! நான் எந்த வம்பு தும்புக்கும் போறதில்லையே ! நிறத்த வச்சும் திட்றாங்களா ?  கருப்பா இருந்தா கரும்பன்னினும் , வெள்ளையா இருந்தா வெள்ளைப் பன்னினும் சொல்றாங்களா ? அட ! இந்த விசயம் எனக்கு இவ்ளோ நாள் தெரியாதப்பா ? இப்படித் திட்டுவதே தப்பே ! 

சினிமாவுலயும் என்னைச் சொல்றாங்களா ? அது எப்படி ?  

ஆமா ! ஆமா !  நாங்க எப்பவுமே ஒற்றுமையாக் கூட்டமாத்தான் அலைவோம். சிங்கம் சிங்கிளா வரும். பன்னிகதான் கூட்டமா வரும்னு சொல்றாய்ங்களா ?  சரி. சரி. அது என்ன படம் ? வாய்ப்புக் கிடைச்சா யூடியுப்ல அந்தப் படத்தப் பாக்குறேன்.     

           அப்பு !  உங்கள விட அழகாத்தான் நாங்களும் குட்டியில இருந்தோம். அழகுனா அழகு அப்டி அழகு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம். ஆமா ! ஆமா ! அதேதான்.எங்களப் பாத்தா சிங்கமே தெறிச்சு ஓடும் தெரியுமா ? மூஞ்சிய வச்சு ஒரு சாத்து சாததுனேன்னா உறுப்பு கழண்டுறும்பு. 

  சரி. சரி. நம்ம ஓவிய ஆசிரியை என்னய எம்புட்டு அழகா வரைஞ்சிருக்காக பாத்திகளா ? அப்டியே அச்சு அசலா ? ஆமா ! எந்தம்பி எங்கவீட்டு மாடில இருந்து என்கிட்ட பேசும்போது வரைஞ்ச படம்தான் இது. நீங்களும் என்னய வரைஞ்சு என்னோட வாட்சாப் நம்பருக்கு அனுப்புங்க.ஒகே வா. இப்ப எப்படி என்னை வரையறுதுனு ஒவ்வொரு படமா பாப்போமா ?

படம் : 1


படம் : 2படம்  : 3
ஹாய் ! எவ்ளோ க்யூட்டா இருக்கேன்ல !
வண்ணம் : திருமதி. செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***********************   ********************

வாழ்த்துகள் நண்பர்களே ! 
பார்த்ததற்கும் , பகிர்ந்ததற்கும் நன்றி !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

உங்கள் வாட்சாப் குழுவில் 97861 41410 என்ற எண்ணை இணைத்து அனைவரும் பயன்பெறச்செய்யலாம் ஆசிரிய நண்பர்களே !

**********************    *********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  *************     ******

Post a Comment

0 Comments