வகுப்பு - 8 பாடம் - தமிழ்
பயிற்சித்தாள் - 13 - இயல் 4
கவிதைப்பேழை
கல்வி அழகே அழகு
************* **************** -***********
1.பின்வருவனவற்றுள் குமரகுருபரர் எழுதாத நூலினைத் தேர்ந்தெடுக்க.
அ ) கந்தர் அலங்காரம்
ஆ ) கந்தர் கலிவெண்பா
இ ) கயிலைக் கலம்பகம்
ஈ) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
விடை: அ ) கந்தர் அலங்காரம்
2. மயங்கொலிப் பிழையற்ற தொடரைத் தெரிவுசெய்து எழுதுக.
அ) கல்விகறையில கற்பவர் நாள் சில
ஆ ) கல்விகரையில கற்பவர் நாள் சில
இ ) கல்விகரையில கர்பவர் நாள் சில
ஈ ) கல்விகரையில கற்பவர் நால் சில
விடை: ஆ ) கல்வி கரையில் கற்பவர் நாள்சில
3. 'வடிவு, வனப்பு, பொழிவு, எழில்' என்னும் பலசொல் தரும் ஒரு பொருளைக் கண்டறிந்து எழுதுக.
அ) தங்கம் ஆ)காடு
இ) அழகு ஈ)வளையல்
விடை: இ ) அழகு
4. சரியா? தவறா? என எழுதுக.
மக்களின் வாழ்வுக்குத் தேவையான
நீதிகளைச் சுட்டிக்காட்டும் நூல்
நீதிநெறிவிளக்கம் ஆகும்.
(சரி )
5. சொற்றொடரில் அமைத்தெழுதுக.
நலன் - மக்கள் நலனை மேம்படுத்த மரக்கன்றுகள் நடுவோம்.
6. பாடலில் விடுபட்டுள்ள சீர்களை எழுதுக.
கற்றோர்க்குக் கல்வி நலனே... கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக்கு அழகுசெய் வார்.
7. கீழ்க்காணும் பாடலடியில் பயின்றுவரும் மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.
'கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்'
விடை: கற்றோர்க்குக், கல்வி, கலனல்லால் - மோனை - க
உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி என்பவை ஐம்பெருங்காப்பியமாகும். இக்காப்பியங்களை எழுதிய புலவர்கள், இவைஐந்தின் பெயருக்கும் ஒரு தொடர்பினை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது, ஐந்தின் பெயர்களும் அணிகலன்களின் பெயர்களைக் கொண்டுள்ளன. சிலம்பு, பெண்கள்
காலில் அணியும் தண்டை. மேகலை, மங்கையர் இடையில் அணியும் இடைநாண். வளை, கையில் அணியும் வளையல். குண்டலம், காதில் அணியும் காதணி. சிந்தாமணி, அரசன் முடியில் பதிக்கப்படும் மணிக்கல். வெவ்வேறு கால இடைவெளியில் இப்புலவர்கள் வாழ்ந்திருந்தாலும் அணிகலன்களின் பெயர்களை தாங்கள் இயற்றிய
காப்பியங்களுக்குச் சூட்டியுள்ளமை வியக்கத்தக்கதொன்றாகும்.
வினாக்கள்
1) அணிகலன், சிலப்பதிகாரம் என்னும் இரு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்
ஒன்று உருவாக்குக.
விடை: சிலப்பதிகாரம், சிலம்பு என்னும் அணிகலனை மையமாகக்
கொண்டு உருவாக்கப்பட்டது.
2) பொருத்துக.
விடை
அ) | சிலம்பு - தண்டை
ஆ) மேகலை - இடைநாண்
இ ) வளை - வளையல்
ஈ ) குண்டலம் - காதணி
உ) | சிந்தாமணி - மணிக்கல்
3) ஐம்பெருங்காப்பியங்கள் இடையேயான வியக்கத்தக்க செய்தியாக நீ கருதுவது என்ன?
விடை: ஐம்பெருங்காப்பியங்களில் வியக்கத்தக்க செய்தியாக
நான் கருதுவது பெண்ணியத்தைப் போற்றும் பண்பாகும்.
9. பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்
வேகாது வேந்த ராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
நிறைவன்றிக் குறைவுறாது
கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு
மிக எளிது கல்வி.
வினாக்கள்
அ) பிரித்து எழுதுக. வெந்தணல்
விடை: வெம்மை + தணல்
ஆ) பாடலில் இடம்பெற்றுள்ள எதிர்ச்சொற்களை எடுத்தெழுதுக.
விடை: நிறைவு × குறைவு
இ) பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனைச்சொற்களை எடுத்தெழுதுக.
விடை: மோனை -
வெந்தணலால்
வெள்ளத்தால்
வெ
எதுகை -
வெள்ளத்தால்
கொள்ளத்தான்
கள்ளர்க்கோ - ள் - எதுகை
10 ) கல்வி பற்றி உனக்குத் தெரிந்த இரு குறட்பாவினை எழுதுக.
குறள் 1:
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக,
குறள் 2:
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து,
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
0 Comments