ஆறாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - பயிற்சித்தாள் 4 - கற்கண்டு - தமிழ் எழுத்துகளின் வகை தொகை - 6 TAMIL - WORKSHEET 4 - QUESTION & ANSWER

 

ஆறாம் வகுப்பு  - தமிழ் 

பயிற்சித்தாள் - 4 

இயல் 1 - கற்கண்டு 

தமிழ் எழுத்துகளின் வகை , தொகை 



1.) பின்வருவனவற்றைப் படித்துக் கோடிட்ட இடத்தை நிரப்புக.

குறில் எழுத்து ஒலிக்கும் கால அளவு - 1 மாத்திரை.

நெடில் எழுத்து ஒலிக்கும் கால அளவு - 2 மாத்திரை.

மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு - 1/2 மாத்திரை.

த்-இந்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு

விடை -  1/2 மாத்திரை

2. மூன்று மாத்திரை அளவுடைய சொல்லைத் தேர்வு செய்க.

அ) அணில

(ஆ)பட்டம்

இ) மரம்

ஈ) பாடம்

விடை: ஆ, பட்டம்

3. குறில், நெடில், ஒற்று அமைந்த சொல்லும் அதன் மாத்திரை அளவும் பொருந்தி வரும் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ) அறம் - மூன்றுமாத்திரை

ஆ) பாடம் - நான்கு மாத்திரை

இ ) மாதம் - மூன்றரை மாத்திரை

ஈ) வரம்- மூன்று மாத்திரை

விடை: இ) மாதம் - மூன்றரை மாத்திரை.

4. சரியா? தவறா? எனக் குறிப்பிடுக.

அ) ஆய்த எழுத்திற்கும், மெய் எழுத்திற்கும் அரை மாத்திரை. ( சரி )

ஆ) வாயைத் திறப்பதால் மட்டுமே மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. (தவறு)

5. பொருத்துக.

அ) கண் -  1 1/2 மாத்திரை

ஆ) கடல்   - 2 1/2 மாத்திரை

இ) பந்தம் - 3 மாத்திரை

ஈ) பாசம்  -  3 1/2 மாத்திரை


6 ) அட்டவணையில் கொடுக்கப்பட்ட சொற்களுள்   மெய்யெழுத்துகளின் இனம் கண்டு எழுதுக.


சொற்கள் - வல் -     மெல்  - இடையினம்

பஞ்சும்   -     -----       ஞ் , ம்          -------

நெருப்பும் -     ப்             ம்            ---------

பக்கம்  -              க்           ம்            ----------

இருந்தால் -    ------         ந்             ல்     

பற்றிக்      -       ற் , க்     ------          --------

கொள்ளும்       --------       ம்            ள் 

7. செம்மொழி - இச்சொல்லின் மாத்திரை அளவைக் கண்டறிக.

விடை: 

செ - 1 

ம்  -  1/2 

மொ - 1

ழி   -   1

மொத்தம் = 3 1/ 2 மாத்திரை


8 ) உன் பெயரைத் தமிழில் எழுதி, அதில் அமைந்துள்ள குறில், நெடில் மற்றும் மெய்யெழுத்துகளைத் தனித்தனியாகப் பிரித்துக் காட்டுக.

விடை : கண்ணன் 

க   = 1

ண்  = 1/2 

ண    = 1

ண்   = 1/2   மொத்தம் = 3 மாத்திரை

9. குறில், நெடில் வேறுபாட்டால் பொருள் மாறுபடும் சொற்கள் ஐந்தனை எழுதுக.

(எ.கா. கல்- கால்)

விடை:

1)  கல் -  கால்

2 ) பல்   -  பால்

3) கலை -  காலை

4 ) விதி -  வீதி

5 )  குடை - கூடை

(10) 'ஏடு எடுத்துப் படித்துப் பார். ஏற்றம் எய்துவாய்', இத்தொடர்களைப் போன்று சொல்லின் முதலில் உயிர்க்குறிலும் உயிர்நெடிலும் பின்தொடர்ந்து வருமாறு இருதொடர்களை அமைக்க.

விடை:

1. இலை ஈரமாக இருந்தது.

8. உன்னோடு ஊருக்கு வருகிறேன்.

*****************    **********************

மாணவர்களே ! மேலே உள்ள வினாக்களின் விடைகளை விரிவான விளக்கத்துடன் கீழே உள்ள காட்சிப் பதிவில் கண்டு மகிழலாம்.



***********************    ******************

வாழ்த்துகள் நண்பர்களே ! 
பார்த்ததற்கும் , பகிர்ந்ததற்கும் நன்றி !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

உங்கள் வாட்சாப் குழுவில் 97861 41410 என்ற எண்ணை இணைத்து அனைவரும் பயன்பெறச்செய்யலாம் ஆசிரிய நண்பர்களே !

**********************    *********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  *************     ********

Post a Comment

0 Comments