கல்வி தொடர்பான அறிவிப்புகள் - Greentamil.in இணையத்தில் உடனுக்குடன்.

 


                       அறிவிப்பு

வணக்கம் ஆசிரியத் தோழர்களே ! மாணவ நண்பர்களே ! அகவிருள் அகற்றி அறிவொளி பரப்பும் ஆசிரியர்களையும் , அன்புச் செல்வங்களாம் மாணவர்களையும் இணைக்கும் கல்விப்பாலமாக நமது Greentamil.in இணையதளம் இயங்கிவருகிறது. 6 முதல் 12 வகுப்பு வரையிலான அனைத்துப்பாடங்களின் வினா & விடைகளை இங்கே  நீங்கள் பார்த்தும் , படித்தும் , பகிர்ந்தும் மகிழலாம். ஆலோசனைகளையும் பெறலாம். நீங்களும் தரலாம். புலனத்தின் வாயிலாகத் தொடர்பிலும் வரலாம்.

  அறிவிப்பு என்ற இப்பகுதியில் நமது பாடம் சார்ந்த நிகழ்வுச் செய்திகளை நீங்கள் உடனுக்குடன் இங்கே காணலாம். தேர்வு தொடர்பான அரசின் அறிவிப்புகள் , வழிகாட்டுதல்கள் , போட்டித் தேர்வு தொடர்பான செய்திகள் , விளக்கங்கள் , ஆலோசனைகள் போன்றவை மாணவர்களின் கற்றல் நலனை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும்.


பாடம் தொடர்பான  வினாக்களுக்கு விடைகள் அறிவிக்கப்படும். மாணவரது கல்வி நலனை முதன்மையான நோக்கமாகக்கொண்டு இந்த இணையதளமும் , Green Tamil என்ற You Tube சேனலும் சிறப்பாக உங்களை வழிநடத்தும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றேன்.

நன்றி.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

97861 41410


Post a Comment

0 Comments