வகுப்பு 9 தமிழ் மதிப்பீடு Online தேர்வு - 9th Tamil Online Test

 


 வகுப்பு - 9 - தமிழ் - Online தேர்வு


வணக்கம் ஆசிரியத் தோழர்களே ! மாணவ நண்பர்களே ! அகவிருள் அகற்றி அறிவொளி பரப்பும் ஆசிரியர்களையும் , அன்புச் செல்வங்களாம் மாணவர்களையும் இணைக்கும் கல்விப்பாலமாக நமது Greentamil.in இணையதளம் இயங்கிவருகிறது. 6 முதல் 12 வகுப்பு வரையிலான அனைத்துப்பாடங்களின் வினா & விடைகளை இங்கே  நீங்கள் பார்த்தும் , படித்தும் , பகிர்ந்தும் மகிழலாம். ஆலோசனைகளையும் பெறலாம். நீங்களும் தரலாம். புலனத்தின் வாயிலாகத் தொடர்பிலும் வரலாம்.


மாணவர்கள் தாங்கள் படித்த பாடப்பகுதிகளை நினைவுபடுத்தும்  விதமாக   ஒவ்வொரு இயல் நிறைவிலும் மாணவர்களின் கற்றல் அடைவுகளைப் பரிசோதிக்கும் வகையில்  Online தேர்வுகள் நடத்தப்பட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாணவர்களின் படைப்பாற்றல் ஊக்கப்படுத்தப்படும். ஆசிரியர் & மாணவர்களின் தனித்திறன்கள் வீடியோவாக இருப்பின் அதை உலகம் முழுவதிலும் Green Tamil என்ற You Tube மூலமாக வெளிச்சப்படுத்தப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றேன். நன்றி.


மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

97861 41410

வினாக்களுக்கு விடையளி

I ) சரியான விடையைத் தெரிவு செய்க.

1 ) கந்தன் தண்ணீர் ஊற்றினான். இத்தொடரில் தண்ணீர் என்பது 

அ ) செயப்படுபொருள்
ஆ ) வினைப்பயனிலை
இ ) பயனிலை
ஈ ) எழுவாய்

2 ) பகுபத உறுப்புகளில் பெரும்பான்மையாக இடம்பெறும் அடிப்படை உறுப்புகளைத் தெரிவு செய்க.

அ ) பகுதி , விகுதி
ஆ ) பகுதி , சந்தி , சாரியை
இ ) விகுதி , இடைநிலை , விகாரம்
ஈ ) சாரியை , சந்தி , பகுதி

3 ) ஆடினான் - இச்சொல்லின் பகுதியைத் தெரிவு செய்க.

அ ) ஆடி
ஆ ) அடி
இ ) ஆடு
ஈ ) ஆட்டு

4 ) பின்வரும் பாடலடி இடம் பெற்றுள்ள நூலினைக் கண்டறிக.

பட்டி மண்டபத்து பாங்கறிந்து ஏறுமின் 

அ ) மணிமேகலை
ஆ ) சிலப்பதிகாரம்
இ ) திருவாசகம்
ஈ ) கம்பராமாயணம்

5 ) கனவிலும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
- யாருடைய நட்பு கனவிலும் இனிமை தராது ?

அ ) செயல்வேறு , சொல் வேறு என்று இல்லார்
ஆ ) செயல் வேறு , சொல் வேறு என்று எண்ணாதவர் 
இ ) செயல் வேறு , சொல் வேறு என்று உள்ளவர்
ஈ ) செயல்வேறு , சொல்வேறு என்று செயல்படாதவர்

6 )  படித்தே முடித்தான் - தொடரில் இடம்பெற்றுள்ள இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

அ ) ஓ

ஆ ) ஏ

இ ) ஆ

ஈ ) ஐ

II ) பொருத்துக.

1 ) எழுந்தது   -   மார்பு

2 ) ஏற்றனர்   -  மருப்பு

3 ) கவிழ்ந்தன  - பலர்

4 ) கலங்கினர் - துகள்

Post a Comment

0 Comments