எட்டாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் - 8 - 8th Tamil Worksheet - மதிப்பீடு - வினா & விடை

 வணக்கம் அன்பு நண்பர்களே ! எட்டாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் 8 - இயல் 2 - மதிப்பீடு - வினா & விடைகள்.

கீழே உள்ள வினாக்களை வீடியோவாக விளக்கத்துடன் பார்க்க Green Tamil என்ற You Tube சேனலைப் பார்க்கவும்

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

**********    **********   *********  **********

1 ) கோடிட்ட இடங்களை நிரப்புக.

நன்செய்புன்செய்க்கு (  உணவை ) ஊட்ட

நாட்டு -- மக்கள் -( வறுமை )  ஓட்டிக்

( கொஞ்சிக் )  குலவி --கரையை... வாட்டிக்

குளிர்ந்த ( புல்லுக்கு ) இன்பம் கூட்டி

*********     *********    *******    **********

2. கீழ்க்காணும் பாடலிலுள்ள இயைபுச் சொற்களை எடுத்தெழுதுக.

"பாட இந்த ஓடை எந்தப்

பள்ளி சென்று பயின்ற தோடி! .

ஏடு போதா இதன்கவிக் கார்

ஈடு செய்ய போராரோடி !

விடை: பயின்றதோடி ! - போராரோடி !

*********  *******   **********    ***********

3. கீழ்க்காணும் உரைப்பகுதிக்குப் பொருத்தமான ஓடைப் பாடலடிகளை எழுதுக.

ஓடை , நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தனது உழைப்பைக் கொடையாகத் தருகிறது. சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்பமுழவை முழக்குவதுபோல் ஒலி எழுப்புகிறது.

விடை

நெஞ்சில் ஈரம் இல்லார் நாண

நீளுழைப்பைக் கொடையைக் காட்டிச்

செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்

சீருக்கு ஏற்ப முடிவை மீட்டும்.

**********   ********   **********   ************

4. அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள வினைச்சொற்களை, இறந்தகால வினைமுற்றுகளாக மாற்றி எழுதுக.


அ) அம்மா நேற்று உணவு சமைத்தார். ( சமை )

ஆ) ஆசிரியர் மாணவர்களை வாழ்த்தினார். (வாழ்த்து)

இ) ஆடுகள் புல் மேய்ந்தன. (மேய்).

ஈ ) மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.... (செல்).

******** *********   **********   ************

5 ) பொருத்தமான ஏவல் வினைமுற்றுகளைக்கொண்டு நிரப்புக.

அ) காலையில் - படி

ஆ) மாலையில் - விளையாடு

இ) குளித்த பின் - உண்

ஈ ) கசக்கிக் - கட்டு

உ) இனிமையாகப் - பேசு

***********  ********** ************   **********

6 ) விடுபட்ட அடிகளை நிரப்புக.

அ) தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்


ஆ) கணைகொடி துயாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்.

இ) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.

***********    ************    **********   ******

7. திருக்குறளுக்குப் பொருத்தமாக அரைப் பக்க அளவில் கதையமைக்க,

"தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.


மாணவர்கள் குறளுக்கேற்ப சொந்தமாக அல்லது புத்தகத்தில் உள்ள கருத்துகளை உள்வாங்கி எழுதலாம்.

*******  *********   *********  **********

வாழ்த்துகள் நண்பர்களே !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
97861 41410
   
********   *********   ************ ********

Post a Comment

0 Comments