வகுப்பு 7 தமிழ் Online தேர்வு -,7th Tamil Online Test

 


 வகுப்பு - 7 - தமிழ் - இயல் 1


வணக்கம் ஆசிரியத் தோழர்களே ! மாணவ நண்பர்களே ! அகவிருள் அகற்றி அறிவொளி பரப்பும் ஆசிரியர்களையும் , அன்புச் செல்வங்களாம் மாணவர்களையும் இணைக்கும் கல்விப்பாலமாக நமது Greentamil.in இணையதளம் இயங்கிவருகிறது. 6 முதல் 12 வகுப்பு வரையிலான அனைத்துப்பாடங்களின் வினா & விடைகளை இங்கே  நீங்கள் பார்த்தும் , படித்தும் , பகிர்ந்தும் மகிழலாம். ஆலோசனைகளையும் பெறலாம். நீங்களும் தரலாம். புலனத்தின் வாயிலாகத் தொடர்பிலும் வரலாம்.


மாணவர்கள் தாங்கள் படித்த பாடப்பகுதிகளை நினைவுபடுத்தும்  விதமாக   ஒவ்வொரு இயல் நிறைவிலும் மாணவர்களின் கற்றல் அடைவுகளைப் பரிசோதிக்கும் வகையில்  Online தேர்வுகள் நடத்தப்பட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாணவர்களின் படைப்பாற்றல் ஊக்கப்படுத்தப்படும். ஆசிரியர் & மாணவர்களின் தனித்திறன்கள் வீடியோவாக இருப்பின் அதை உலகம் முழுவதிலும் Green Tamil என்ற You Tube மூலமாக வெளிச்சப்படுத்தப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றேன். நன்றி.


மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

97861 41410

வினாக்களுக்கு விடையளி.

I. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1 )  எங்கள் தமிழ் மொழி ----- போன்றது.

2 ) குற்றியலுகரம் ------ வகைப்படும்.

3 ) சோலையில் பூங்குயில் ------

4 ) தம்முன் இல்லாத ஒருவரைப்பற்றிப் ----- கூடாது.

5 ) ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக , எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது ----- எனப்படும்.

II ) சரியா ? தவறா ?

6 ) உலக மொழிகளில் தமிழ் மொழி தொன்மையானது.

7 ) எழுத்து மொழி இருப்பதனால்தான் திருக்குறள் முதலான நூல்களைக் காலம் பல கடந்தும் நம்மால் படிக்க முடிகிறது.

8 ) தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் நெடில்தொடர்க் குற்றியலுகரமாகும்.

9 ) இந்திய வனமகன் என ஜாதவ்பயேங் அழைக்கப்பட்டார்.

10 ) தமிழர்கள் பழங்காலம் முதலே வீரத்திலும் , கல்வியிலும் சிறந்து விளங்கினர்.

III ) பொருத்துக.

11 ) அவசியம்  - மருத்துவம்

12 ) சாதம்     - தேவை

13 )தகவல்     - சொல்

14 ) வார்த்தை  - சோறு

15 ) வைத்தியம்  - செய்தி

IV ) காட்டின் வளமே நாட்டின் வளம் என்னும் தலைப்பில் ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.

வாழ்த்துகளுடன் ,

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை. 97861 41410


Post a Comment

0 Comments