ஆறாம் வகுப்பு - அறிவியல் - பயிற்சித்தாள் 2 - 6th Science Worksheet 2 - பருவம் 1 - அலகு 2 - விசை மற்றும் இயக்கம்.

 ஆறாம் வகுப்பு - அறிவியல் - பருவம் 1

அலகு - 2  -  பயிற்சித்தாள் - 2

விசை மற்றும் இயக்கம்1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பின்வருவனவற்றில் தொடா விசைக்கு பொருத்தமில்லாத உதாரணத்தைத் தேர்ந்தெடு . 

அ. மேலே எறியப்பட்ட பந்து கீழே பூமியை அடைதல்

ஆ. மேலே விண்ணில் இருந்து மழைத்துளி பூமியை அடைதல்

இ. இரும்பு தூள் காந்தப்பட்டையை நோக்கி ஈர்க்கப்படுதல்

ஈ ) அமுக்கப்பட்ட அல்லது இழுத்து கட்டப்பட்ட சுருள் வில்லிருந்து செயல்படும் விசை

விடை : ஈ ) அமுக்கப்பட்ட அல்லது இழுத்து கட்டப்பட்ட சுருள் வில்லிருந்து செயல்படும் விசை.

2. உடலியல் தசை சக்தியை பயன்படுத்தி வாளியில் இருந்து தண்ணீர் தூக்குதல் பின்வருவனவற்றில் எந்த விசைக்கு உதாரணமாகும்.

அ. தொடு விசை

ஆ. தொடாவிசை

விடை : அ. தொடு விசை

3. கீழ்கண்டவற்றில் தொடா விசைக்கு மிகப் பொருத்தமான இணையை கண்டுபிடி.

அ. உராய்வு விசை, இயல்பு விசை

ஆ. புவிஈர்ப்புவிசை, மின்காந்தவிசை

இ. காந்த விசை, உராய்வு விசை

ஈ. அணுசக்தி விசை, இயல்பு விசை

விடை : ஆ ) புவி ஈர்ப்பு விசை , மின்காந்த விசை

4. ஒரு சரியான இடைவெளியில் தொடர்ந்து நடைபெறும் இயக்கம் எந்த வகையானது ?

அ. வட்ட இயக்கம்

ஆ. நேர்க்கோட்டு இயக்கம்

இ) கால இயக்கம்

ஈ. வளைவு இயக்கம்

விடை - இ ) கால இயக்கம்

5. பெட்டியில் திருகானது திருகப்படும் போது ஏற்படும் இயக்கம்.

அ. நேர்க்கோட்டு இயக்கம் மற்றும் வட்ட இயக்கம்
ஆ. நேர்க்கோட்டு இயக்கம் மற்றும் சுற்று இயக்கம்
இ.வட்ட இயக்கம் மற்றும் அலைவு இயக்கம்
ஈ.அலைவு இயக்கம் மற்றும் நேர்க்கோட்டு இயக்கம்

விடை : இ ) வட்ட இயக்கம் மற்றும் அலைவு இயக்கம்.

6 . இரு சமமற்ற விசையானது ஒரு பொருளின் மீது செயல்படும் போது அதன் நிலையில்

அ. மாற்றம் அடையும்
ஆ. மாற்றமடையாது
இ. ஒருபோதும் மாற்றமடையாது
ஈ. மேற்கண்ட எதுவும் இல்லை.

விடை அ : மாற்றம் அடையும்

I1 கோடிட்ட இடத்தை நிரப்புக :

7. மணி தனது பள்ளியில் கால்பந்து விளையாடியபோது பந்தை இலக்கை நோக்கி எட்டி உதைத்தான். மேலே கண்ட செயலில் மணி கால்பந்து உதைத்தல் தொடு  விசைக்கு உதாரணமாகும் .

8. நிலை மின்னியல் விசை தொடா விசைக்கு உதாரணமாகும்.

9. படை வீரர்கள் படையில் அணி வகுத்து செல்வது சீரான இயக்கத்திற்கு
உதாரணமாகும்.

10. பூமி சூரியனை வலம் வருதல் கால ஒழுங்கு இயக்கத்திற்கு உதாரணமாகும்.

11. சுழல் பந்து வீச்சாளர் பந்தை சுழற்றி வீசுதல் வளைவுப் பாதை இயக்கத்திற்கு
உதாரணமாகும்.

III .  சுருக்கமாக விடையளி

12. சீரான மற்றும் சீரற்ற இயக்கங்களை வேறுபடுத்துக

சீரான இயக்கம் - குறிப்பிட்ட கால இடைவளியல் சீரான வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கம்.
(எ.கா )  தொடர் வண்டி .

சீரற்ற வேகம் :
மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின்
இயக்கம் (எ.கா )  பேருந்தின் இயக்கம்.


13. பின்வரும் சூழலை உற்று நோக்கி இவை எவ்வகையான இயக்கம் என அடையாளம்
காண்க


அ) தொட்டில் இயக்கம் - அலைவு ---
இயக்கம்

ஆ) ஓடும் இரயில் வண்டி
சீரற்ற இயக்கம்

அ) தொட்டில் இயக்கம் - அலைவு ---
இயக்கம்

இ ) பறக்கும் பறவை ஒழுங்கற்ற இயக்கம்

ஈ ) கோள்களின் இயக்கம் கால ஒழுங்கு இயக்கம்.

வாழ்த்துகள் நண்பர்களே !
வீட்டில் இருந்மை நமது பாடங்களைப் படித்து மகிழ வாழ்த்துகள்

மு.மகேந்திர பாபு ,தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

Post a Comment

0 Comments