வகுப்பு - 6 - அறிவியல் - பயிற்சித்தாள் -1 - அளவீடுகள் / 6th Science Worksheet 1 - பருவம் - 1 - அலகு 1 - அளவீடுகள்

 

           வகுப்பு - 6 - அறிவியல் - பயிற்சிப் புத்தகம் 

பருவம் - 1 - அலகு 1  - பயிற்சித்தாள் -1 - அளவீடுகள் 



1.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. டன் அல்லது மெட்ரிக்டன் போன்ற அளவுகளால் அளவிட படுவது

அ. சிறிய அளவிலான எடை

ஆ. பெரிய அளவிலான எடை

இ. மிகச் சிறிய அளவிலான எடை

 விடை ஈ மிகப் பெரிய அளவிலான எடை


2. கீழே கொடுக்கப்பட்டவற்றுள் பொருந்தாத ஓன்று

அ. கிராம்

ஆ. சென்டிமீட்டர்

இ. வினாடி

ஈ. மணி

விடை  ஈ. மணி


3. உனது வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே உள்ள தொலைவினை அளவிட

பயன்படுவது   கிலோ மீட்டர் 

அ) அளவு நாடா

ஆ. அளவுகோல்

இ. நிறுத்து கடிகாரம்

ஈ-கடிகாரம்


II. பொருத்துக.                       விடைகள்


அ வகுப்பறையின் நீளம்  -  அளவு கோல்

ஆ ஆள்காட்டி விரலின் நீளம் - அளவு நாடா

இ 1000கி பொம்மையின் எடை - பொது தராசு
      
ஈ . 50 நிமிடம் மற்றும் 22 வினாடி - மின்னணு கடிகாரம்

 உ .  தலைவலி மாத்திரையின் எடை   -  மின்னணு தராசு 


III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

4. உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மாதிரியான அளவீட்டு முறை பன்னாட்டு அலகு  முறை

5. நிறுத்து கடிகாரத்தை பயன்படுத்தி அளவிடப்படுவது  நாடித்துடிப்பு

6. எடை என்பது நிறையின் மேல் செயல்படும் புவி ஈர்ப்பு விசை ஆகும்.

7. பொது தராசினை பயன்படுத்தி நாம் அளவிடுவது  பொருளின் நிறை

IV. சரியா தவறா என எழுதுக:

8. ஒரு பொருளின் நிறையை அளவிட பொது தராசு பயன்படுகிறது. சரி

9. முற்காலத்தில் நிறுத்து கடிகாரத்தை பயன்படுத்தி நேரத்தை கணக்கிட்டனர். தவறு

10. ஓடோ மீட்டர் என்பது தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவை
கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் கருவி ஆகும்.-  சரி

11. ஒரு ஊசியின் நீளத்தை அளவிடும் போது ஊசியின் ஒருமுனை அளவுகோலில் 2.5 சென்டிமீட்டர் என்ற அளவிலும் மற்றொரு முனை 22.5 சென்டிமீட்டர் என்ற அளவிலும் பொருந்தினால் பின்னல் ஊசியின் நீளம் 25 சென்டி மீட்டர் ஆகும்.  தவறு

12. டெசி : 1/10 மற்றும் சென்டி : 1/1000: இவை இரண்டும் ஒரே விதமான தொடர்பை குறிக்கின்றது. சரி,

V. சுருக்கமாக விடையளி :

13. நீயும் உனது நண்பர்களும் அவரவர் காலடியை பயன்படுத்தி வகுப்பறையின் நீளத்தை அளவிட திட்டமிட்டுள்ளீர்கள். பின்னர் அனைவரின் அளவுகளையும் ஒப்பிட்டு பார்த்து, ஏன் அனைவருக்கும் ஒரே மாதிரியான விடை வரவி லை என வகுப்பறையில் கலந்துரையாடி காரணம் கண்டுபிடி..

மாணவர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்ட உயரம் உடையவர்களாக இருப்பார்கள் அதனால் அவர்களின் காலடி அளவு மாறுபடும் .

14. உனது தாய் வாங்கிய இரண்டு பவுன் தங்க நகையை கிராமில் கூறுக.

விடை:16 கிராம்
1 பவுன்  = 8 கிராம்
2 பவுன் = 2 x 8 = 16 கிராம்

15. துணி காயப்போடும் ஹேங்கர், 2 காகித குவளை மற்றும் நூல் போன்றவற்றை பயன்படுத்தி பொது தராசு ஒன்றினை தயாரித்து அவை வேலை செய்யும் விதத்தினை விளக்குக.

        வாழ்த்துகள் நண்பர்களே !  மு. மகேந்திர பாபு ,  தமிழ் ஆசிரியர்  ,         மதுரை                                                          97861 41410



Post a Comment

0 Comments