ஆறாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் 2 - 6th Tamil Worksheet 2 Question & Answer - இயல் 1 - கவிதைப்பேழை - தமிழ்க்கும்மி

ஆறாம் வகுப்பு - தமிழ் - பருவம் - 1

இயல்1 - பயிற்சித்தாள் - 2

கவிதைப்பேழை-  தமிழ்க்கும்மி



கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி - நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!

ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு
ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் - பெரும்
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம் !



பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் - அன்பு
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் - உயிர்
மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த
மேதினி வாழ்வழி காட்டிருக்கும்!


-பெருஞ்சித்திரனார்

1 ) பின்வருவனவற்றுள் கும்மி கொட்டுதல் என்பது ------  ஆகும்.

அ) மேளம் கொட்டி ஓசை எழுப்புவது

ஆ) பறை கொட்டி ஓசை எழுப்புவது

இ )கைகளைக் கொட்டி ஓசை எழுப்புவது

ஈ) மத்தளம் கொட்டி ஓசை எழுப்புவது

விடை: இ) கைகளைக் கொட்டி ஓசை எழுப்புவது

2.கோதையர்' என்னும் சொல் யாரைக் குறிக்கிறது?

அ) ஆடவர்

ஆ) பெண்டிர்

இ) புலவன்

ஈ) சிறுவன்

விடை: ஆ ) பெண்டிர்

3. 'இளங்கோதையர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) இளமை + கோதையர்

ஆ) இளங் + கோதையர்

இ) இளம் + கோதையர்

ஈ) இளங்கோ + தையர்

விடை : இ ) இளமை  + கோதையர்

4. கீழ்க்காணும் பத்தியைப் படித்துக் கோடிட்ட இடங்களை நிரப்புக.

"இளம்பெண்களே! தமிழின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவிடும் வகையில்கைகளைக் கொட்டிக் கும்மியடிப்போம். பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ் மொழி. அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி. பெரும்கடல்  சீற்றங்கள்  , காலமாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி."

அ) தமிழின் புகழ் எட்டுத் திசையிலும் பரவிட வேண்டும்.

ஆ) தமிழ் நூல்கள் அறிவு ஊற்றைப் போன்றவை.

5. சரியா? தவறா?

அ) கடல் பெருக்கிற்கும் அழியாதது நம் தமிழ்மொழி.  ( சரி ) 


ஆ) ஊழி என்ற சொல்லின் பொருள் ஊற்று என்பதாகும். ( தவறு )

6. தமிழ்மொழி எவற்றையெல்லாம் கடந்து நிலைத்து நிற்கிறது?

விடை: பல நூறு ஆண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கிறது.

7. ஒத்த ஓசை அமையாத இணையைக் கண்டறிக .

அ) கொட்டு - எட்டு
ஆ) ஊழி - ஆழி
இ ) பூண்டவர் - மேதினி
ஈ) பொய்   - மெய்

விடை : இ) பூண்டவர் - மேதினி

8. கீழ்க்காண்பனவற்றுள் பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்களை வட்டமிடுக.

அழகின் சிரிப்பு     கொய்யாக்கனி       பாஞ்சாலி சபதம்     

நூறாசிரியம்        குயில் பாட்டு                  பாவியக்கொத்து

9. உங்கள் வாழிடத்தில் நீங்கள் கேட்ட ஏதேனும் ஒரு நாட்டுப்புறப் பாடல் குறித்துக் கீழ்க்காணும் செய்திகள் வெளிப்படும் வண்ணம் பேசுவதற்கேற்ப 10வரி எழுதுக.

(பாடல் தலைப்பு. கேட்ட நிகழ்வு மற்றும் இடம், பாடலின் பொருள், பாடல் கூறும் செய்தி (அ) நீதி)

விடை: மாணவர்கள் தாங்கள் கண்டதை  அல்லது கேட்டதைப் பற்றிச் சுயமாக எழுதலாம். 

10. பாடலடிகளைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

ஊழிபலநூறு கண்டதுவாம் அறிவு
ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் - பெரும்
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம்.



வினாக்கள்

1 ) பொருள் எழுதுக. ஆழி

விடை - கடல்

2 ) பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றிவந்துள்ள சொற்களை எடுத்து எழுதுக.

விடை  -   ஊழி, ஆழி - ழி 


3 ) எதிர்ச்சொல் தருக. பெரும், முற்றும்

பெரும் ×  சிறும்

முற்றும் × தொடரும்.

***************      *************     ***********

மேலே உள்ள வினாக்களின் விடைகளை இனிய , எளிய விளக்கத்துடன் காட்சிப் பதிவாகக் கண்டு மகிழலாம்.




***************    ************    ************

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !




மு மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

YOU TUBE - GREEN TAMIL

Post a Comment

0 Comments