12 ஆம் வகுப்பு - தமிழ் - அலகுத் தேர்வு - 1 - மதுரை, மே - 2021- 12 th Tamil - Unit Test - 1 , Madurai

 -

               மதுரை வருவாய்மாவட்டம்

                              பொதுத்தமிழ்

                 அலகுத் தேர்வு-1 மே - 2021

                                12.ஆம் வகுப்பு



நேரம் : 1 : 30                                                                                                     மதிப்பெண் 50

 1. பலவுள் தெரிக :                                  1x6=6                                                                                                                                                                                                                                              

1.சிற்பி பாலப்பிரமணியம் எழுதிய இளந்தமிழே ன்ற கவிதை இடம் பெற்ற கவிதைத் தொகுப்பு

அ.காகிதப்பூ   ஆ.நிலவுப்பூ     இ.மத்தாப்பூ    ஈ. சூரியப்பூ 

2.இக்கியத்தையும் மொழியையும் ஒரு சேரப்பேசுகின்ற இலக்கண நூல்

அ.யாப்பறுங்கலக்காரிகை,  ஆ.தண்டியலங்காரம்,

 இ.தொல்காப்பியம்  ஈ. நன்னூல்.

3.தமிழில் அழகியலை உருவாக்குவதற்குத் தளம் அமைத்துத் தருவது

அ.திருக்குறள், ஆ.கல்வெட்டு, இ.தொல்காப்பியம்., ஈ.புராணம்.

4.கருத்து 1 )  இயல்பு வழக்கில் தொடரமைப்பு என்பது  எழுவாய் ,  பயனிலை என்று வருவதே மரபு .

கருத்து 2  ) தொடரமைப்பு சங்கப்பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது .

அ. கருத்து 1 சரி, 2 தவறு, ஆ . கருத்து 2 சரி,கருத்து 1 தவறு, இ. இரண்டும் தவறு, ஈ ) இரண்டும்  சரி.

5.பாடலின் தளத்தைப் பாத்திகட்டி வரப்புயர்த்தும் பணியைச் செய்வது

அ.ஒலிக்கோலம், ஆ.தொடரியல் வடிவம், இ.சொற்புலம், ஈ.சொற்றொடர் நிலை.

6 ) பாரதியார்  நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்களைப்  பதிப்பித்தவர்

அ.இளசைமணி, ஆ. ஆ.ரா.பத்மநாபன், இ. கி.ராஜநாராயணன், 

ஈ ) கவிகேசரிசாமி,

II.அ.கீழ்வரும் குறுவினா ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி.                   1x2=2

7.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டுமென்கிறார்?

      தினமும் உடல் வருந்தி உழைப்பதால் , சிவந்த கைகளை உடைய தொழிலாளர்களின் தோள் மீது காணப்படும் வியர்வை முத்துப் போல் வீற்றிருக்கும். அதை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்று கவிஞர்.சிற்பி கூறுகிறார். 

8.பொருள் வேற்றுமையணியை பாடலுடன் குறிப்பிட்டு விளக்குக.

அணி விளக்கம் :

          இருவேறு பொருள்களுக்கிடையே  ஒற்றுமையை முதலில் கூறி , பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி.

பாடல் :

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று)  ஏனையது

தன்னேர் இலாத தமிழ்.

பொருள் : தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறி , அவற்றுள் தமிழ் தன்னேரில்லாதது என்ற தனைமையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று.

ஆ.கீழ்வரும் குறுவினா ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி.                  Ix2=2

9.நடையழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

10.மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை?

இ.குறுவினா -  எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.                     2x2=4

11.அ. முத்துமுத்தாய் - இலக்கணகுறிப்பு தருக. 

ஆ. சாய்ப்பான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

12.செம்பருதி, வானமெல்லாம் - புணர்ச்சி விதி தருக

13.உவமைத் தொடர்களை சொற்றொடர்களில் எழுதுக.

அ, எலியும் பூனையும் போல 

ஆ. உள்ளங்கைநெல்லிக்கனிபோல

III.அ.சிறுவினா - ஏதேனும் ஒன்றனுக்கு விடை தருக.                     1x4=4

14.செம்பரிதி மலை மேட்டில் தலையைச் சாய்ப்பான்  செந்நிறத்து பூக்காடாம் வானமெல்லாம் -  தொடர் வெளிப்படுத்தும காட்சி நயத்தை விளக்குக.

15.ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

ஆ.சிறுவினா -  ஏதேனும் ஒன்றனுக்கு விடை  தருக.                         1x4=4

16.சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும்  - விளக்குக.

17.சொல்வளம் பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது எவ்வாறு ?

இ.ஏதேனும் ஒன்றனுக்கு விடை தருக.                                                   1 ×4 = 4

18.தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய  முயற்சிகள் யாவை?

19.கீழ்வரும் வினாக்களுக்கு விடையளி தமிழாக்கம் தருக.

அ.  A New language is a New life

ஆ.If you want people to understand you, Speak their language.

இ. பிழையானதொடரைக் கண்டறிக.

i . காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.

ii. காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

ஈ. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.

i. அவருக்கு நல்லது கெட்டது தெரியும்.

ii . புத்தகக்கண்காட்சி நடைபெறுகின்றது.

IV.அனைத்து வினாக்களுக்கும் விடையளி.                                           3x6-18

20.கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.

21.தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பிபாலகப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

22.பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று ,சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

V.மனப்பாடப்பகுதி                                                                                            4+2=6

"ஓங்கலிடைவந்து” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.

"மகற்கு” என முடியும் குறளை எழுதுக,

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை. 97861 41410



Post a Comment

0 Comments