வகுப்பு 11 கணினி அறிவியல் - மதிப்பீடு

 வகுப்பு 11 - கணினி அறிவியல் 

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளி.

1 ) முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள் -----

அ )  வெற்றிடக் குழல்

ஆ ) திரிதடையகம்

இ ) ஒருங்கிணைந்த சுற்றுகள்

ஈ ) நுண்செயலிகள்

2 ) தற்காலிக நினைவகம் எது ?

அ ) ROM

ஆ ) PROM

இ ) RAM

ஈ ) EPROM

3 ) வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.

அ ) விசைப்பலகை 

ஆ ) நினைவகம்

இ ) திரையகம்

ஈ ) சுட்டி

4 ) உள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.

அ ) அச்சுப்பொறி

ஆ ) சுட்டி

இ ) வரைவி

ஈ ) படவீழ்த்தி

5 ) சுட்டி வரைபடத்திட்டம் , பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது ?

அ ) வெப்ப அச்சுப்பொறி

ஆ ) வரைவி

இ ) புள்ளி அச்சுப்பொறி

ஈ ) மைபீச்சு அச்சுப்பொறி

6 ) கணிப்பொறி என்றால் என்ன ?

7 ) தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.

8 ) மையச் செயலகத்தின் (CPU ) பகுதிகள் யாவை ?

9 ) கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக.

10 ) நினைவகத்தின் செயல்பாடு யாது ?

Post a Comment

0 Comments