ஏழாம் வகுப்பு - தமிழ் - பருவம்-1
பயிற்சித்தாள் -1
கவிதைப் பேழை - எங்கள் தமிழ்
1 அன்பும் அறனும் அக்கிவிடும் இந்தப் பாடல் வரியில் ஊக்கி என்பதன் பொருள் ---------ஆகும்
அ ) தூண்டுதல்
ஆ) மறத்தல்
இ அழைத்தல்
ஈ) கொடுத்தல்
விடை : அ ) தூண்டுதல்
2 பின்வருவனவற்றுள் சரியாகப் பிரிக்கப்படாத சொல்லைக் கண்டறிக.
அ ) அன்பறம் = அன்பு + அறம்
ஆ ) தரலாகும் = தரல் +ஆகும்
இ ) வானொலி = வானம் + ஒலி
தேன்மொழி = தேன்+மொழி
விடை - வானொலி - வானம் + ஒலி
3 ) பொருள் பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது - இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்களைக் (எதிர்ச்சொல் ) கண்டறிக.
அ. பொருள் - போற்றா
ஆ) புகழாது - இகழாது
இ ) யாரையும் - தாரையும்
ஈ ) பொருள் - பெற
விடை - ஆ ) புகழாது - இகழாது
4 ) பின்வருவனவற்றுள் மயங்கொலிப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.
அ ) இண்பம் பொளிகிர வானொளியாம்
ஆ ) இன்பம் பொலிகிற வாணொளியாம்
இ) இன்பம் பொழிகிற வானொலியாம்
ஈ ) இண்பம் பொளிகிற வானொலியாம்
விடை : இ ) இன்பம் பொழிகிற வானொலியாம்
5. நூலோடு நூல் வகையைப் பொருத்துக.
அ) மலைக்கள்ளன் - புதின நூல்
ஆ)அவனும் அவளும் - கதைப்பாடல் நூல்
இ) என் கதை - வாழ்க்கை வரலாறு நூல்
ஈ) சங்கொலி - கவிதை நூல்
6. கோடிட்ட இடத்தை நிரப்புக.
எங்கள் தமிழ்மொழி ---தேன் -- போன்றது.
விடை : தேன்
7. பின்வரும் பாடலடியில் விடுபட்ட சீர்களை எழுதுக.
"அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்"
8. சரியா? தவறா? எனக் கூறுக.
தமிழ்மொழி,
1 ) உலக மொழிகளில் தொன்மையானது.
2 ) மென்மை, இனிமை, பழைமை உடையது.
3) அன்பையும் அறத்தையும் கூறுகிறது.
4) காலச்சூழலுக்கு ஏற்ப என்றும் இளமையாகத் திகழ்கிறது.
விடை : சரி
9. நாமக்கல் கவிஞர், 'காந்தியகவிஞர்' என அழைக்கப்படக் காரணம் என்ன?
விடை:
காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என அழைக்கப்பட்டார்.
10. இன்புற்று வாழ, மக்கள் எதனைப் பின்பற்ற வேண்டும்? எதனை ஒதுக்க வேண்டும்?
விடை :|
4. மக்கள் இன்புற்று வாழஅன்பையும், அறத்தையும் பின்பற்ற வேண்டும்.
2. அச்சத்தினை ஒதுக்க வேண்டும்.
வாழ்த்துகள் நண்பர்களே !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
0 Comments