ஏழாம் வகுப்பு - கணக்கு - பருவம் 1 - அலகு 1 - எண்ணியல் - பயிற்சித்தாள் 1

 ஏழாம் வகுப்பு  - கணக்கு - பருவம் 1 

   அலகு 1 - எண்ணியல் - பயிற்சித்தாள் -1

வினா எண் 1முதல் 10 வரை 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1 ) ( - 888 ) , ( - 2020 ) மற்றும் ( - 2092 ) ஆகியவற்றின் கூடுதல்

அ ) 5000

ஆ ) -5000

இ ) 4000

ஈ) -4000

விடை - ஆ) - 5000


2 ) கீழ்க்காணும் சமன்பாட்டினை நிறைவு செய்யும் முழுவை கட்டத்தினுள் இடுக.

- 80 + 30 = [] = 85

அ ) - 30

ஆ )  30

இ )  -20

ஈ ) - 70

விடை - அ ) - 30

4 ) கீழ்க்காணும் கூற்றினை நிறைவு செய்யும் முழுக்களின் கூட்டலின் பண்பு எது ?

[ ( - 5 ) + ( - 2 ) ] + ( - 7 ) = ( - 5 ) + [ ( - 2 ) + ( - 7 ) ]

அ ) அடைவுப் பண்பு 

ஆ ) பரிமாற்றுப் பண்பு

இ ) சேர்ப்புப் பண்பு

ஈ ) சமனிப் பண்பு

விடை - இ ) சேர்ப்புப் பண்பு

5 ) 25 + ( - 25 ) = 0 எனில் ( - 25 ) என்பது 

அ ) 25 ன் கூட்டல் எதிர்மறை

ஆ ) 25 ன் கூட்டல் சமனி

இ ) 25 க்குச் சமமானது.

ஈ ) 25 ன் தலைகீழி 

விடை - அ ) 25 ன் கூட்டல் எதிர்மறை

6 ) ( - 15 ) + 20 + ( - 5 ) = -------

அ ) 40

ஆ ) 20

இ ) 0 

ஈ ) - 40

விடை - இ ) 0

7 ) இரவி நீச்சல் குளத்தின் 30 அடி ஆழத்தில் நின்று கொண்டிருக்கிறார்.நீரின் மட்டம் 15 அடி அளவு உயரும் போது அவர் மகிழ்ச்சியாக நீந்திக்கொண்டு இருக்கிறார். குளத்தின் மேலிருந்து இரவி தற்போது எவ்வளவு அடி ஆழத்தில் நீந்திக் கொண்டு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடி.

அ ) நீச்சல் குள கீழ்மட்டத்திலிருந்து 23 அடி மேல்

ஆ ) நீச்சல் குள மேல்மட்டத்திலிருந்து 23 அடி கீழ்

இ ) நீச்சல் குள கீழ்மட்டத்திலிருந்து 38 அடி மேல்

ஈ ) நீச்சல் குள மேல்மட்டத்திலிருந்து 15 அடி கீழ்

விடை - ஆ ) நீச்சல் குள மேல்மட்டத்திலிருந்து 23 அடி கீழ்

8 ) 22 லிருந்து ( - 18 ) ஐ கழிக்க கிடைப்பது 

அ ) ( - 40 ) 

ஆ ) 40

இ ) - 4

ஈ ) 4

விடை - ஆ ) 40

9 ) கீழ்க்காணும் கூற்றில் எது தவறானது ?

அ ) முழுக்களின் கூட்டலில் அடைவுப் பண்பு உண்டு.

ஆ ) முழக்களின் கூட்டலில் சேர்ப்புப் பண்பு உண்டு

இ ) முழுக்களின் கழித்தலில் அடைவுப் பண்பு உண்டு.

ஈ ) முழுக்களின் கழித்தலில் சேர்ப்புப் பண்பு உண்டு.

விடை - ஈ ) முழுக்களின் கழித்தலில் சேர்ப்புப் பண்பு உண்டு.

10 ) கீழ்க்காணும் கூற்றில் எது சரி ?

அ ) 25 - 0 = 25

ஆ ) 0 - 25 = 25

இ ) 25 × 0 = 25

ஈ ) 0 ÷ 25 = 25

விடை - அ ) 25 - 0 = 25

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

97861 41410

Post a Comment

0 Comments