தாய்மை

 தாய்மை


இரவின்  நிசப்தம்  உடைத்து ,

திடீரென  எல்லோரையும் 

திடுக்கிட்டு  எழச் செய்கிறது 

தொட்டிலில்  அழும் 

பச்சிளம்  குழந்தை .

பசியமர்த்தி 

தூங்கச் செய்த பின்னரும் ,

தூங்காமலே  இருக்கின்றன 

தாயின்  கண்கள் 

தொட்டிலை  பார்த்த படியே !


  மு.மகேந்திர  பாபு .

Post a Comment

0 Comments