காலை நேர கிராமத்துப் பேருந்தில்

 ஒரு  காலை  நேர கிராமத்துப்  பேருந்தில் ......


 @      ஒவ்வொரு  நிறுத்தத்திலும் 

          நின்று  நின்று 

          செல்லும் டவுன் பஸ் .


@       சட்டுன்னு  இறங்கித்  தொலையேன் ....

           ஒன்னாருபா டிக்கெட்  எடுத்திட்டு 

           நடுவுல  போய்   நிக்கலாட்டி என்ன ?

           ஸ்டாப்  வந்த உடன் 

           வாசலுக்குப்  பக்கத்தில  வந்து 

           நிக்க  வேண்டியதானே  ?

           கண்டக்டரின்   கண்டிப்பு 

           சில  வேளைகளில் ....  

 

@       ஸ்டாப்  கடந்தும்    

           மெதுவாய்  

           உருட்டிக் கொண்டே  

           போகும்   டிரைவர் .


@        வேகமா  மிதிச்சா 

            கால்ல  என்ன 

            தேளா   கொட்டிரப்  போகுது  ?

            தனக்குத்  தானே  

            முனகும்   பயணி  .


@        வீட்டிலிருந்து  

            அவசரமாய்  ஓடி  வந்து ,

            சட்டையை  கையில்   

            வைத்துக்  கொண்டு 

            பஸ்ஸில்  ஏறி ,

            சட்டை  மாட்டும்   பயணி  .


@        இவ்வளவு  நேரம்  வரைக்கும்   

            வீட்ல  செரச்சிக்கிட்டு 

            இருந்தான்  போல ...

            அருகில்   உள்ளவரிடம்  

            காதைக்  கடிக்கும்  ஒருவன் . 


@         கால்  வைக்க  முடியாதபடி  

             கூட்டம்  இருந்தாலும்   

             முண்டியடிக்கும்   கல்லூரி  மாணவர்கள் ,

             தங்கள்  புத்தகங்களை 

             உட்கார்ந்திருக்கும் 

             சக  கல்லூரிப்  பெண்களிடம்

             இளித்தவாரே   கொடுப்பது  .....


@         இதே  சோலியாப் 

             போச்சு   இவங்களுக்கு .....


@         ரெண்டு  ரூபா  டிக்கெட்டுக்கு 

             நூறு  ரூபா எடுத்து 

             நீட்டும்  ஒருத்தர் .

             ''வீட்ல  இருந்து  சில்லரை

             கொண்டு  வந்தா என்ன  

             தேஞ்சா  போயிருவ  ?''.....


@          எட்டயபுரம்  ஆட்டுச்  சந்தைக்கு 

              கெடா குட்டியை  விக்க ,

              தன்  கால்  இடுக்கில்

              வைத்திருக்கும்  ஒருவன் .


@           கூட்டம்  கண்ட   மிரட்சியில் 

               சிறுநீரும் ,புழுக்கையும்  போட...

               விட்டா....மாட்டையும் 

               ஏத்துவாங்க  போல ...ச்சே ....


@            பஸ்  ஸ்டாண்டில் 

                பஸ்  நின்றவுடன் ,

                வேகமாய்   இறங்கி  ஓடும் 

                என்  கால்கள் .....

                புறப்பட்டுக்  கொண்டிருக்கும் 

                அடுத்த  பஸ்ஸ  பிடிப்பதற்கு ...

      

@            இவ்வளவு  வேகமா 

                ஆளத்  தள்ளிவிட்டு  இறங்கி  ,

                மயித்துல  மலையைக்  கட்டி  

                இழுக்கப்  போராம்  போல .....

                என்  மனம்  எனக்கே  சொல்லும்  .....


மு.மகேந்திர பாபு

Post a Comment

4 Comments

  1. அருமை அருமை ஐயா. அனுபவம் சிறப்பு... எனக்கும் ஏற்பட்டது. மகிழ்ச்சியான பயணம்.

    ReplyDelete
  2. என்ன ஒரு அனுபவம் சூப்பர்

    ReplyDelete
  3. என்ன ஒரு அனுபவம் சூப்பர்

    ReplyDelete