மனிதம் வளர்ப்போம் ! - இசைப்பாடல்

 மனிதம் வளர்ப்போம்  ! (இசைப் பாடல் )


நாகரிக மோகத்தில நேயத்தைக் காணோம் -மனித நேயத்தைக்  காணோம் 

மண்ணில் நடமாடும் மனிதரிடம் மகிழ்ச்சியைக் காணோம் 

மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிப் போச்சு 

மனித நேயம் மட்டும் ஏங்ககருகிப் போச்சு   ?


ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் எதற்கு ?

உயர் வென்றும் தாழ்வென்றும் எண்ணம் எதற்கு ?

பகுத்தறிவு இருப்ப தெல்லாம் சண்டை போடவா ?

மடமை பேசி மனிதரின் மண்டை உடையவா?


சங்கம் வைத்து வளர்த்ததெல்லாம் தமிழைத் தானங்க-இப்ப 

சங்கம் வைத்து வளர்ப்பதெல்லாம் சாதி தானங்க 

யானைக்கு மதம் பிடித்தால் கட்டிப் போடுவாய் 

மனிதனுக்கு மதம் பிடித்தால் வெட்டிப் போடுவாய் -பிறரை 


நாள்முழுக்க நண்பரோடு மட்டை பிடிக்கிறாய் 

வீட்டில் ஒரு வேலை என்றால் கோபம் வெடிக்கிறாய் 

படிப்பைத் தவிர மற்றவற்றில் ஆர்வம் வந்தது 

வாழ்க்கை நிலை குறையும்போது புத்தி வந்தது 


உனக்குள்ளே நம்பிக்கையை விதைத்துப் போடடா

உள்ளத்திலே கள்ளம் என்றால் சிதைத்துப் போடடா 

உதவி செய்யும் பக்குவத்தைப்  போற்றி பாரடா 

மனிதநேயம்  உன்னைப்  போற்றும் நன்றி கூறடா   (நாகரிக .......)


மு.மகேந்திர பாபு

Post a Comment

0 Comments