பேரம்
தெருவெங்கும் சுத்தி ,
நெஞ்சுக்கூட்டிலிருந்து
ஜீவன் எடுத்துக் கத்தி ,
தொண்டைத்தண்ணி வத்தி
தலைச்சுமையோடு
விற்றுவருகிறாள் கீரையை
கிராமத்துப் பெண்ணொருத்தி .
நகரத்துப் பெண்கள் கூட்டம்
பேரம் பேசத் தொடங்கியது.
ஐந்து ரூபாய் கீரைக்கட்டை
நான்கு ரூபாய் என பேச்சுத்திறமையால்
வாங்கி சாதனை செய்ததாக
நினைத்தவர்கள்தான் ...
பெரும் பெரும் துணிக்கடைகளிலும்,
நகைக்கடைகளிலும்
அச்சிடப்பட்ட விலைக்கே
தன்வாய்மூடி வாங்கிக்கொண்டு
செல்கின்றனர் பொருட்களை !
மு.மகேந்திர பாபு
0 Comments