மரத்தை வெட்டாதே ! - இசைப்பாடல்.

மரத்தை வெட்டாதே    !  (இசைப்  பாடல்  )
                                                                                                                                             மரத்தை வெட்டாதே ....மனிதா !  மரத்தை  வெட்டாதே ! 
நீயும்  நானும்    நல்லாருக்க எல்லாம் தந்திடும்  -அந்த 
மரத்தை  வெட்டாதே ....மனிதா !மரத்தை  வெட்டாதே   !

அலுத்துக் களைத்து வரும்போது  சோர்வை  நீக்கிடுமே  !
பசியைப் போக்க   பிணியைப்  போக்க கனியும்  தந்திடுமே   !
பறவைக் கூட்டம்  வந்து செல்ல  வீடாய் இருந்திடுமே    !
பூக்களைத்தான்   பார்க்கும்போது  மகிழ்ச்சி   பூக்குமே   !
ஒற்றைக்  காலில்  நின்று கொண்டே  ஊரைக் காத்திடுமே   !- (எனவே ...)

கோடை  வெயில் கொளுத்தும்போது  நிழலைத்  தேடுவாய் 
குளுமை  வந்து சேரும்போது   நன்றி  பாடுவாய் 
சாலையோரம்  மரங்கள்  நட்டினால்  பயணம்  இனிக்குமே  !
வீதி எங்கும்  மரங்கள்  நட்டினால்  வீடு மகிழுமே   !
வீதி  எங்கும்  மரங்கள்  நட்டினால்  வீடு   மகிழுமே   !    -(எனவே ...)

ஓசோன்   படலம்   ஓட்டையாகிப்     போவதேனடா  ?
உலகம்   இப்ப   வெப்பமாக   ஆவதேனடா     ?
கார்காலம்   காலம்  கடந்தும்  பொய்ப்பதேனடா  ?
நிலத்தடி  நீர்  மண்ணுக்குள்ளே  இல்லே   பாரடா   -காரணம் 
மரங்கள்  இப்ப மண்ணிலே  குறைந்து   வருதடா  !  -( எனவே ......)

மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments