கெரகம் பிடிச்ச கொக்கு

அவன் சோலியப் பாத்துட்டு சும்மா போவானா , அத விட்டுப்புட்டு இவன்ட போயி வம்பிழுத்திருக்கான்.கடேசில என்னாச்சு ? ...

என்னாச்சு ? 

என்னாச்சா ? நல்லா கேட்டீரு கேள்விய ?  கெரகம் பிடிச்ச கொக்கு கெழுத்திய மிழுங்குன கதையாச்சு.

அதென்ன கத ?

அதென்ன கதையா ?  சொல்றேன் கேட்டுக்கோரும். இந்தக் கொக்கு இருக்கே ! அது கம்மாயில கெடக்குற கெண்ட , அயிர , உளுவ , குரவனு எந்த மீனனாலும் திங்கலாம்.ஆனா , இந்த கெழுத்திய கொத்திச்சுனா , அது தொண்டயில போய் வகையா மாட்டிக்கிரும்.கெழுத்தியோட கழுத்துப் பக்கத்தில முள்ளு இருக்கும்.அது  உள்ள போக விடாது உசிர வாங்கிரும். கொக்கால மிழுங்கவும் முடியாது , துப்பவும் முடியாது.

அட  ஆமாப்பா.

என்ன ஓமாப்பா ...? 

மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments