சுகமாய் வாழ சுற்றுச்சூழல் காப்போம் !

 சுகமாய் வாழ  சுற்றுச்சூழல் காப்போம் ! 

உலகம் போற போக்கப் பாருங்க
பூமி நிலைமை கொஞ்சம் எடுத்துக் கூறுங்க
மண்ணும் மரமும் அழிஞ்சு போகுதே 
மனுசன் மனசு கல்லாய் ஆகுதே !

வாங்குவது ஐந்து ரூவா பொருளுதான்
மறக்காம வாங்குறோமே பாலித்தீன் கவருதான்
காலை முதல் மாலைவரை தானுங்க
பாலித்தீன தூக்கிக்கிட்டு அலையுறோமே ஏனுங்க?

துணிப்பையைத் தூக்குங்க துக்கம் இல்லங்க
நெகிழிப்பையை நினைச்சாலே தூக்கம் இல்லங்க
தினம் டீக்குடிக்கும் கப்பு தானுங்க
தூக்கி வீசிப்புட்டா தப்புத் தானுங்க

அழகுப் பொருளைப் போட்டுத்தானே அலங்கரிக்கிறோம்
நம்ம உடம்பை அழகு பார்க்கிறோம்
நச்சுப் பொருளைக் கொட்டி நாசம் பண்ணுறோம்
பூமித்தாயின் உடம்பை தினமும் மோசம் பண்ணுறோம

இன்பச் சுற்றுலா போவது நாமதானுங்க
எல்லா இடத்திலும் நச்சப்போட்டா தீமைதானுங்க
மண்ணும் மரமும் கேட்பது மழையைத் தானுங்க
மனச்சாட்சி இல்லாம பேசுறோமே விலையைத்தானுங்க

பூமிப்பந்தில் மனுசன் மட்டும் உயிரு இல்லங்க
புல்லும் பூண்டும் அழிஞ்சுபோனா மனுசன் இல்லங்க
வாழும்வரை வளமாத்தான் வாழ வேணுங்க
சுற்றுச்சூழல் சுகமா நம்மை ஆளவேணுங்க.

மு.மகேந்திர பாபு ஆசிரியர்

Post a Comment

0 Comments