என்னால் முடியும்

என்னால் முடியும்

எதையும் முடியாது
என்று சொன்னால்
உன் வாழ்க்கை விடியாது.
தலை பணிந்து நடப்பது
தலை குனிவல்ல.

உன் முயற்சியால் பின்னாளில்
தலை நிமிர்ந்து நிற்பாய்.
முயற்சியும் , பயிற்சியும் 
வெற்றியின் இரு தோழர்கள்.

ஒவ்வொரு அஸ்தமனமும்
இன்னொரு விடியலுக்கான ஒத்திகையே !
ஒவ்வொரு துன்பமும்
இன்னொரு இன்பத்திற்கான தொடக்கப்புள்ளி.

கவலைகளை விட்டுவிடு.
என்னால் முடியும் என்று
தன்னம்பிக்கையால்
வெற்றியினைத் தொட்டுவிடு.

மு.மகேந்திர பாபு

Post a Comment

0 Comments