கொரானா - விழிப்புணர்வுப் பாடல்.
பாடலாசிரியர் - பசுமைக் கவிஞர்.மு.மகேந்திர பாபு.
பாடகர் - பலகுரல் மன்னன்.நன்னிலம்.கேசவன்.
பல்லவி
அடங்கு வீட்டுக்குள்ள அடங்கு
நீ வீட்ட விட்டு வெளியில் வந்தா சடங்கு
இறுதிச் சடங்கு ( 2 )
சரணம்
நாடு முழுவதுமே நடுங்கிப் போயி கெடக்கு
வீடு மட்டும்தான் பாதுகாப்பா இருக்கு ( நாடு )
வீட்ட விட்டு வெளியில் நீயும் வராதே !
வீட்டுக்குத்தான் துன்பத்த நீயும் தராதே ! ( வீட்ட ...)
கூட்டம் கூடுமிடம் பக்கம் நீயும் போகாதே !
கைய குலுக்கித்தான் நண்பரிடம் பேசாதே ! ( கூட்டம் ...)
தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டைய பொத்திக்கோ !
கொலைகார கொரானாவ விரட்ட நீயும் கத்துக்கோ ! ( தும்மும் ...)
கைய நல்லா சோப்பு போட்டு கழுவுங்க !
கண்ண மூக்க கண்டிப்பா தொடாதிங்க ! ( கைய ... )
காய்ச்சல் வந்தா டாக்டர் கிட்ட போகனும் !
கண்டுக்காம விட்டுப்புட்டா கொரானாவால சாகனும் ( கண்டுக்காம ... )
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
பேசி - 97861 41410.
0 Comments